Chivingi Tigers: 4 மாதங்களில் 8 சிவிங்கிப் புலிகள் இறப்பு...

வட ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட சிவிங்கி புலிகள் தொடர்ந்து ஒவ்வொன்றாக இறந்து வருகின்றன. குறிப்பாக கடந்த நான்கு மாதங்களில் 8 புலிகள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து சொத்து பரிவர்த்தனைகளுக்கும் தமிழ்நாட்டில் முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்துவது கட்டாயமாகும். தமிழ்நாடு முத்திரைச் சட்டத்தின்படி, சில பத்திரங்களுக்கு முத்திரைக் கட்டணம் மிகவும் கட்டாயம் ஆகும்.

சிவிங்கி புலிகள் :

நம் நாடுகளில் சிவிங்கிப் புலிகள் அடியோடு அழிந்து விட்டன. இதன் காரணமாக மீண்டும் சிவிங்கிப் புலிகளை இந்தியாவிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாக இரண்டு கட்டமாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மொத்தமாக 20 சிவிங்கிப் புலிகளை கொண்டு வர திட்டமிட்டது. முதல் கட்டமாக இந்தியாவில் 10 புலிகள் இறக்குமதி செய்யப்பட்டன. அவை அனைத்தும் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குனோ நேஷனல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. முதலில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருந்த இந்த புலிகள் நம்முடைய நாட்டிற்கு ஏற்ற மாதிரி சூழ்நிலையை மாற்றிக்கொள்ள சிக்கல்களை சந்தித்து வருகின்றன. ஆனால் இந்த புலிகள் ஆரம்பத்தில் நன்றாக தான் வளர்ந்து வந்தன. திடீரென கடந்த நான்கு மாதங்களில் 8 சிவிங்கி புலிகள் இறந்து விட்டன.

நேற்று காலையில் சூரஜ் என்கிற பெயரைக் கொண்ட புலி திடீரென இறந்து போனது. இப்படி திடீர் இறப்புக்கு காரணம் தெரியாமல் மருத்துவர்கள் தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர். அதற்கு முன் தினத்தில் தான் தேஜஸ் என்னும் பெயரைக் கொண்ட ஒரு ஆண் புலி இறந்தது. அந்த தேஜஸ் காயம் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஆண் புலி மற்றொரு புலியுடன் சண்டையில் ஈடுபட முயன்ற போது தேஜஸ் என்னும் ஆண் புலி படுகாயம் அடைந்தது. அந்தக் காலத்தில் இருந்து சிகிச்சை அளித்து வந்த போதும் குணமடைய முடியாமல் இறந்து போனது.

முதலில் கடந்த மார்ச் மாதம் ஷேஷா என்னும் பெண் புலி சிறுநீரக பிரச்சனையால் இறந்து போனது. அதற்கு அடுத்த மாதம் உதை என்னும் ஆண் புலியும் மே மாதம் தக்ஷா என்ற பெண் புலியும் அதிக அளவு வெப்பம் காரணமாக உயிரிழந்தது. அதே மே மாதம் 25ஆம் தேதி 2 புலி குட்டிகள் இறந்து விட்டன. 90% சிவிங்கிப் புலிகள் உயிரிழப்பை அடிக்கடி சந்தித்து வருகின்றன என வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய காரணம் :

சிவிங்கி புலிகள் மற்றும் வனப்பகுதியில் உள்ள புலிகள் தங்களின் நிலப்பரப்பை முடிவு செய்யும் போது அடிக்கடி மோதிக்கொள்கின்றன. இதுவே சிவிங்கிப் புலிகளும் உயிரிழக்க முக்கிய காரணமாகும்.

Latest Slideshows

Leave a Reply