Chiyaan 62 : விக்ரமின் அடுத்த படத்திற்கான அப்டேட்...

Chiyaan 62 :

சியான் விக்ரம் அடுத்ததாக நடிக்க இருக்கும் Chiyaan 62 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் சியான் என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். சேது படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் செல்லப்பெயரான சியான் என்ற பெயரும் அவருக்கு ஒட்டிக்கொண்டது. இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு சிறந்த இயக்குனர்கள் மற்றும் சிறந்த படங்கள் அவரை தமிழில் முன்னணி நடிகராக ஆக்கியுள்ளது. தொடர்ந்து ஷங்கர், மணிரத்னம் போன்ற முன்னணி இயக்குனர்களுடன் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டாரர் படமான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகி விக்ரமிற்கு பெரும் வரவேற்பைப் பெற்று தந்தது. கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தின் முதல் பாகமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரமின் துருவ நட்சத்திரம் படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

இதனிடையே நடிகர் விக்ரம் நடிக்கும் படங்களின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தற்போது அவர் நடித்து வரும் தங்கலான் படத்தின் டீசரும், படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி தங்லான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும், நவம்பர் 1ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் நடிக்கவுள்ள 62வது (Chiyaan 62) படத்திற்கான இயக்குனர் மற்றும் படத்தின் விவரங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது அந்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது விக்ரமின் 62வது படத்தை (Chiyaan 62) எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். இவர் இதற்கு முன் சிந்துபாத், பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சித்தா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

அதில் அவர் சித்தார்த்தை வைத்து இயக்கிய சித்தா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக விக்ரமின் 62வது படத்தை இயக்குகிறார். தற்காலிகமாக “Chiyaan 62” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ரியா ஷிபுவின் எச்ஆர் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைக்க இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் துருவநக்ஷத்திரம் திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Latest Slideshows

Leave a Reply