Chiyaan Vikram Injured: தங்கலான் படப்பிடிப்பு நிறுத்தம்
சீயான் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் பா.ரஞ்சித்தும், இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இருவரும் முதன்முறையாக இணைந்துள்ளனர்.
இந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக, நடிகர் விக்ரம் உடல் எடையை குறைத்து தன்னை வறுத்திக்கொண்டு தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றி ரசிகர்களை மிரள வைத்தார். இந்தப் படம் கேஜிஎஃப் பின்னணியில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கோலார் தங்க வயலை மையமாக உருவாகும் இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டுடியோஸ் க்ரீன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் பயிற்சியின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விக்ரமின் மேனேஜர் சூர்ய நாராயணன் வெளியிட்ட தகவலில் , “பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்திற்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி.
நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் படத்திற்காக பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தபோது அவருக்கு விலா எலும்பு முறிந்தது. அதனால் அவரால் தற்போது படப்பிடிப்பில் பங்கேற்க முடியவில்லை. உங்கள் அன்புக்கு நன்றி தெரிவித்தார். “அவர் குணமடைந்து முன்பைப் போலவே ஆச்சரியப்படுவார்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.