Cholesterol Reducing Fruits: கொலஸ்ட்ரால் குறைக்கும் 10 பழங்கள்

உடலில் தேங்கும் கெட்ட கொழுப்புக்களை குறைக்கும் சிறந்த பழங்களைப் பற்றி பார்க்கலாம். உடலில் தேங்கும் அதிகப்படியான கழிவுகள் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் ஆனது உயர்இரத்த அழுத்தம், பக்கவாதம், உடல் பருமன், கல்லீரல் நோய், சர்க்கரை நோய் போன்ற எண்ணற்ற பாதுப்புகள் ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. இந்த கெட்ட கொலஸ்ட்ராலை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கு நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், கீரைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் பதார்த்தங்கள், நொறுக்கு தீனிகள், மது, புகை பழக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தினமும் உடல் உழைப்பு இருப்பது அவசியம் அந்த வகையில் உடலில் தேங்கும் அதிகப்படியான கொலஸ்ட்ரால் மற்றும் கழிவுகளை குறைத்து உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் முக்கிய பழங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

10 Cholesterol Reducing Fruits Lists:

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாது உப்புகள்,மினரல்கள் நிறைந்துள்ளது. இதிலுள்ள உயர்தரமான ஆன்டி ஆக்சிடண்ட் இரத்த குழிகளில் தேங்கும் கெட்ட கொழுப்புகளை படிப்படியாக நீக்கி இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. இதே போன்று சர்க்கரை நோய்,உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய் போன்ற பல்வேறு பாதிப்புகளையும் குறைக்கச் செய்கிறது. உடல் பருமன், உயர் கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் தினமும் ஒரு நெல்லி காயை சாப்பிட்டு வர சிறந்த  பலன் கிடைக்கும்.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வரும்போது உடலில் உள்ள கழிவுகளும், கெட்ட கொழுப்புகளும் குறைய தொடங்கும். ஆப்பிளில் உள்ள இயற்கையான வேதி பொருட்களும், ஆன்டி ஆக்சிடண்ட்சும் இரத்தத்தில் தேங்கும் கெட்ட கொழுப்புகளை குறைத்து நுரையீரல், கல்லீரல், இதயம், சிறு நீரகம் போன்ற உடலின் உள் உறுப்புகளைப் பாதுகாக்கிறது.  

மாதுளைப் பழம்

மாதுளைப் பழத்தில் கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளன. மாதுளையை அடிக்கடி சாப்பிட்டு  வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றும். இரத்த ஓட்டத்தை சீராக்கி உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கும் இதிலுள்ள துவர்ப்பு சுவை வைட்டமின் சி உடலில் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்

எலுமிச்சம் பழம்

வைட்டமின் சி அதிகம் நிறைந்த சிட்ரஸ் வகை பழம் எலுமிச்சை. உடலில் உள்ள கொழுப்பு சத்தால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்களை குறைக்க உதவுகிறது. எலுமிச்சை சாறு கலந்த ஒரு குவளை வெதுவெதுப்பான நீரில், தேன் சேர்த்து ஒரு மாதம் அருந்தி வரலாம். பிறகு வாரத்திற்கு இரண்டு முறை அருந்தி வந்தால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். புற்று நோய் வராமல் தடுக்கும்.

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி இயற்கையான வேதிப்பொருட்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கொழுப்பு கட்டிகள் உருவாகாமல் தடுக்கிறது. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இதய நோய் வராமல் தடுக்கவும், உடலில் இரும்பு சத்தை உறுஞ்சவும் உதவுகிறது. தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் இதிலுள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கழிவுகள் உயர் கொலெஸ்ட்ரால் அளவை குறைத்து. உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது.

பப்பாளி பழம்

பப்பாளி பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்தது. பப்பாளி பழம் இரண்டு கீற்றுகள் அளவு தினமும் சாப்பிட்டு வந்தால். இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் மற்றும் கழிவுகளின் அளவை குறைக்கும். கல்லீரல், சிறுநீரகம், கருப்பை தொடர்பான நோய்களை குறைக்கும். 

திராட்சை பழம்

திராட்சை பழங்களில் கருப்பு நிற திராட்சை கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்களுக்கு நல்லது. இந்த கருப்பு திராட்சையில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இதிலுள்ள இயற்கையான வேதிய அமிலங்கள், ஆன்டி ஆக்சிடண்ட் குணங்கள் உடலில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. ஒரு கைப்பிடி திராட்சை பழத்தை அதன் விதைகளோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்கி கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்யும். 

முலாம் பழம்

கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பழம் முலாம் பழம். இதில் அதிக அளவில் நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் மிக குறைத்த அளவிலான கலோரிகளையும் கொண்டுள்ளதால், முலாம் பழத்தை துண்டுகளாக  நறுக்கியோ அல்லது ஜூஸாக செய்தோ அருந்தி வரலாம். இதன் மூலம் உடலில் கொழுப்பு தேங்குவதை தடுக்கும். உடலுக்கு ஆற்றலை அளித்து உடல் சோர்வை நீக்கும்.

பேரிச்சம் பழம்

பேரிச்சம் பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இதிலுள்ள நார்ச்சத்துக்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கச் செய்து இதய அடைப்பு வருவதை தடுக்கிறது. மேலும் இரத்த ஓட்டத்தை சரிசெய்கிறது, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. தினமும் 4 அல்லது 5 பேரிச்சையை சாப்பிட்டு வருவது கொழுப்பின் அளவை குறைப்பதுடன் பல்வேறு நன்மைகளையும் உடலுக்கு அளிக்கிறது.

அண்ணாச்சி பழம்

அண்ணாச்சி பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. இதிலுள்ள ப்ரோமெலைன் என்னும் வேதிப்பொருள் உடலில் இரத்தம் உறைதலையும், இரத்த குழாய்களில் கொழுப்பு படிவதையும் தடுக்கிறது. மேலும் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கவும்.இதய நோய் வரும் அபாயத்தையும் குறைக்கிறது.

உடலில் அதிக அளவில் கெட்ட கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் மேற்கூறிய இந்த பழ வகைகளை சாப்பிடுவதன் மூலம் எளிதில் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கலாம்.   

Latest Slideshows

Leave a Reply