Cinema Celebrities Wishes Actor Vijay : அரசியலில் குதித்த விஜய் | வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். பல படங்களில் நடித்து வரும் விஜய் சமீபகாலமாக அவரது படங்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் விஜய் அரசியலுக்கு வருவதாக சில வருடங்களாக தகவல்கள் கசிந்து வரும் நிலையில், நேற்று விஜய் தான் தொடங்கும் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் விஜய்க்கு சினிமா பிரபலங்கள் மற்றும் கட்சி தலைவர்கள் வாழ்த்து (Cinema Celebrities Wishes Actor Vijay) தெரிவித்து வருகின்றனர்.

அரசியலில் குதித்த விஜய் :

நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் நேற்று அதாவது பிப்ரவரி 2 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. “தமிழக வெற்றி கழகம்” என பெயர் முடிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் அறிவிக்கப்பட்டது. வரும் 2024 லோக்சபா தேர்தலில் தனது தமிழக வெற்றி கழகம் போட்டியிடாது என்றும் யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்றும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் கூறியுள்ளார். இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இறுதியாக என்னை பொறுத்த வரையில் அரசியல் என்பது மற்றோரு தொழில் அல்ல, இது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமின்றி, அதன் நீளம், அகலத்தையும் அறிய, அதற்காக என்னை நீண்ட நாட்களாக தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்தி வருகிறேன்”.

Cinema Celebrities Wishes Actor Vijay :

  • எனவே, “அரசியல் எனக்கு பொழுதுபோக்கல்ல; அதுவே எனது ஆழ்ந்த ஆசை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்த விரும்புகிறேன்” என்றார். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது அரசியலுக்கு வந்த விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  • அதன்படி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஜனநாயகத்தில் நாட்டில் அரசியல் கட்சி தொடங்க யாருக்கும் உரிமை உள்ளது. புதிய கட்சி தொடங்கிய விஜய்க்கு எனது வாழ்த்துகள். நடிகர் விஜய்யின் பணி சிறக்கட்டும்” என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

  • “தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காக பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்தியுள்ளார்.

  • அவரைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “கட்சியை தொடங்கியுள்ள விஜய் மண்ணை ஆள்வதற்கு முன்பு முதலில் மக்களின் மனதை வெல்ல வேண்டும். எம்ஜிஆர் கட்சி தொடங்கிய போது வெற்றிடம் இருந்தது. அதனால், அவரால் வெற்றி பெற முடிந்தது. நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை தக்க வைக்க கடுமையாக உழைக்க வேண்டும்” என்றார்.

  • ராகவா லாரன்ஸ், “உங்கள் அரசியல் பிரவேசத்திற்கு வாழ்த்துகள் நண்பா. இந்த புதிய பயணத்தில் வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • எக்ஸ் தளத்தில் பாடலாசிரியர் விவேக், “வாழ்த்துக்கள் பேரன்புமிக்க விஜய் சார். தவெக தமிழ் மக்களின் கைகளில் வாளாகவும், கேடயமாகவும் திகழும் என்ற நம்பிக்கையோடு, எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

  • நடிகர் ஷாந்தனு, “வாழ்த்துக்கள் நண்பா, நீங்கள் பெரிய உயரங்களை எட்டவும், ஒரு தலைவராக தமிழகத்திற்கு நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதை சிறப்பாக செய்ய வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

  • மேலும் சேரன், அட்லீ, நெல்சன், கார்த்திக் சுப்புராஜ், வரலக்ஷ்மி சரத்குமார், ஹரிஷ் கல்யாண், அனிருத், ரத்னகுமார், கவின், சனம் ஷெட்டி உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை (Cinema Celebrities Wishes Actor Vijay) தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply