Circadian App : 7 நொடிகளில் இதய நோய்களை கண்டறியும் சர்க்காடியான் ஆப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் வசிக்கும் 14 வயதுடைய இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவர் சித்தார்த் நந்தியாலா மருத்துவத் துறையில் ஒரு முக்கிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அவர் கண்டுபிடித்துள்ள ‘சர்க்காடியான்’ (Circadian App) செயற்கை நுண்ணறிவு ஆப் வெறும் 7 நொடிகளில் இதய நோய்களின் அபாயத்தை கண்டுபிடித்து மருத்துவ உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறைந்த வயதில் AI சான்றிதழ் பெற்ற சித்தார்த்

ஆந்திரப் பிரதேசம் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்த சித்தார்த் நந்தியாலாவின் குடும்பம் தற்போது அமெரிக்காவின் டல்லாஸில் வசித்து வருகின்றனர். இளம் வயதிலேயே தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்தில் அதிக ஆர்வம் கொண்ட சித்தார்த் Oracle மற்றும் ARM நிறுவனங்களின் (Circadian App) சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். இதன் மூலம் குறைந்த வயதில் உலகின் AI சான்றிதழ் பெற்ற நபர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

Circadian App - Platform Tamil

சர்க்காடியான் ஆப் (Circadian App)

சித்தார்த் நந்தியாலா உருவாக்கியுள்ள ‘சர்க்காடியான்’ ஆப் ஸ்மார்ட்போனின் மூலம் இதய ஒலிகளை பதிவு செய்து அவற்றை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி ஒருவரின் இதய நோய்களின் (Circadian App) அபாயத்தை வெறும் 7 நொடிகளில் கண்டறிய முடியும். இந்த சர்க்காடியான் ஆப்பின் துல்லிய விகிதமானது 96 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது. மேலும் இதுவரை அமெரிக்காவில் 15000-க்கும் மேற்பட்ட இதய நோயாளிகளிடமும், இந்தியாவில் 700-க்கும் மேற்பட்ட நோயாளிகளிடமும் இந்த சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்க்காடியான் ஆப் ஆந்திர பிரதேசத்தில் உள்ள குண்டூர் அரசு பொது மருத்துவமனையில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. மேலும் சர்க்காடியான் ஆப் இதய நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நோயாளிகளுக்கு விரைவான சிகிச்சை அளிக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய்களினால் ஏற்படும் மரணங்களை குறைக்க முடியும். மேலும் மருத்துவச் செலவுகளை குறைத்து, பொதுமக்களின் சுகாதார நிலையை மேம்படுத்துகிறது.

சந்திரபாபு நாயுடு வாழ்த்து

இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய சித்தார்த் நந்தியாலாவை, ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு அவர்கள் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து அவரது எதிர்காலத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சித்தார்த் நந்தியாலாவின் அற்புதமான திறமையையும், மனித குலத்தின் நலனுக்கான அவரது தொழில்நுட்ப சிந்தனையால் ஈர்க்கப்பட்ட அவர் “இந்த இளம் விஞ்ஞானி நம் அனைவருக்கும் (Circadian App) ஒரு உத்வேகம், அவரது சுகாதார தொழில்நுட்ப கனவுகளை நனவாக்க ஆந்திரப் பிரதேச அரசு முழு ஆதரவு அளிக்கும்” என்று கூறினார். மேலும் சித்தார்த் இந்த சர்க்காடியான் ஆப்பை மேலும் மேம்படுத்தி உலக அளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply