Citizenship Amendment Act : குடியுரிமை திருத்தச் சட்டம் 11.03.2024 அன்று அமலுக்கு வந்தது

CAA (Citizenship Amendment Act) Came Into Force On 11.03.2024

இந்திய நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA – Citizenship Amendment Act) 11.03.2024 அன்று அமல்படுத்தப்பட்டது. உள்துறை அமைச்சகம் ஆனது இது தொடர்பான அறிவிப்பையும் அரசிதழிலில் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஆனது மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என சொன்னபடி நிறைவேற்றி உள்ளது. கடந்த 2019 டிசம்பர் 11-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா சட்டத்திற்கு, குடியரசுத் தலைவர் மறுநாளே ஒப்புதல் அளித்தார். பின்னர், இந்த குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா ஆனது 2020ஆம் ஆண்டே அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து 4 ஆண்டுகள் கழித்து தற்போது மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. மசோதா நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் கழித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை (Citizenship Amendment Act) மத்திய அரசு இன்று அமல்படுத்தியுள்ளது.

இந்த குடியுரிமை திருத்த சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கின்றது. அதாவது இந்தியாவின் அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்தவர்கள், இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சிகள், ஜைனர்கள், ஆகிய 6 சமூகங்களைச் சேர்ந்த மக்கள் இந்தச் சட்டத்தின் மூலம் இந்தியாவில் குடியேறுகின்ற குடியுரிமை பெற முடியும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை (Citizenship Amendment Act) மத்திய அரசு இன்று அமல்படுத்தியதை அடுத்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அஹிரி தோலா படித்துறையில், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பினர் கங்கா ஆரத்தி எடுத்து வழிபட்டனர். அஹிரி தோலா படித்துறையில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பினர் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து, சட்டம் அமலுக்கு வந்ததை வரவேற்றனர்.

இந்திய நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியிலும் 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்திலும், குடியுரிமை சட்ட திருத்த போராட்டம் வன்முறை வழியில் சென்றதால் இம்முறை அப்படியேதும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக  நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காவல் துறையினர் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

காவல்துறையினர் வடகிழக்கு டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்தனர். உத்தரப்பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தலாம் என்பதால் பாதிப்பு ஏற்படக் கூடிய மாநிலங்களில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டது. இதற்கு முன்பு வன்முறை வெடித்த டெல்லியின் ஜாமியா உள்ளிட்ட பகுதிகளில் உளவுத் துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Latest Slideshows

Leave a Reply