தமிழக அரசு TNPSC நடத்தும் நீதித்துறையில் சிவில் நீதிபதி வேலைக்கான தேர்வை அறிவித்துள்ளது. இந்த பதவிக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. நீதித்துறையில் காலியாக உள்ள சிவில் நீதிபதி பதவிக்கான இடங்களை நேரடி நியமனம் செய்வதன் மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கான அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
பணி விவரம்
* பதவி: சிவில் நீதிபதி
* காலிப்பணியிடங்கள்: 245
கல்வித்தகுதி
* இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் சட்டபடிப்பை முடித்த பட்டதாரியாக இருக்க வேண்டும். 45% மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.
* ஏற்கனவே பணியில் உள்ள விண்ணப்பதாரர்கள் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
* ஏற்கனவே பணியில் இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 25 வயது முதல் 37 வயது வரை இருக்க வேண்டும்.
* MBC/ ST/ SC/ BC ஆகிய பிரிவினருக்கு அதிகபட்ச வயதாக 42 வயது இருக்க வேண்டும்.
* இடஒதுக்கீடு உள்ள பிரிவினர் மற்றும் அனைத்து வகுப்பினருக்கும் 27 வயதாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவை பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு விவரங்கள்
விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பப் பதிவுக் கட்டணமாக150 ரூபாயும், தேர்வுக்கட்டணம் 200 ரூபாயும் செலுத்த வேண்டும். முன்னாள் இராணுவ வீரர், மாற்றுத்திறனாளி, SC/ST ஆகிய பிரிவினர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.
தேர்வு நடைபெறும் நாட்கள்: முதன்மை தேர்வு: 19/08/2023 முதல் 29/09/2023 வரை நடைபெறும்.
நேர்முகத் தேர்வு: 28/10/2023 மற்றும் 29/10/2023 ஆகிய நாட்களில் நடைபெறும்.
தேர்வு நடைபெறும் மையங்கள்
சென்னை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை, விழுப்புரம், சேலம், தஞ்சாவூர், வேலூர், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் தேர்வு நடத்தப்படும்.