CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசுக்கு சொந்தமான மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் Central Leather Research Institute (CLRI) சென்னை அடையாறில் சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் தலைமை அலுவலகம் சென்னையிலும் கிளை அலுவலகங்கள் அலகாபாத், கொல்கத்தா, ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ளன. தற்போது இந்நிறுவனத்தில் காலியாக (CLRI Recruitment 2025) உள்ள 41 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

CLRI Recruitment 2025

1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப வல்லுநர் (Technician) பணியிடங்களுக்கு மொத்தம் 41 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. கல்வி தகுதி (Educational Qualification)

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த தொழில்நுட்ப வல்லுநர் (Technician) பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு (CLRI Recruitment 2025) முடித்தவர்களும், ஐடிஐ பிரிவில் துறை சார்ந்த பாடப்பிரிவு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. வயது தகுதி (Age)

இந்த தொழில்நுட்ப வல்லுநர் (Technician) பணியிடங்களுக்கு 18 வயது முதல் 28 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் (CLRI Recruitment 2025) விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. சம்பளம் (Salary)

இந்த தொழில்நுட்ப வல்லுநர் (Technician) பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.38000/- சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்த தொழில்நுட்ப வல்லுநர் (Technician) பணியிடங்களுக்கு (CLRI Recruitment 2025) ஸ்டேஜ் 1 தேர்வு, ஸ்டேஜ் 2 தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. விண்ணப்ப கட்டணம் (Application Fees)

இந்த தொழில்நுட்ப வல்லுநர் (Technician) பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்று திறனாளிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7. கடைசி தேதி (Last Date)

இந்த தொழில்நுட்ப வல்லுநர் (Technician) பணியிடங்களுக்கு (CLRI Recruitment 2025) வரும் பிப்ரவரி 16-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 

8. மேலும் விவரங்களுக்கு

https://www.clri.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

Leave a Reply