CM Congratulates Praggnanandhaa : பிரக்ஞானந்தாவை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

CM Congratulates Praggnanandhaa :

வேகத்தை தொடருங்கள் வரவிருக்கும் சவால்களில் வெற்றி பெறுங்கள் என பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து (CM Congratulates Praggnanandhaa) தெரிவித்துள்ளார்.

அஜர்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கம் வென்றார். இதையடுத்து நேற்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் படித்த வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவர்களும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வீரர்களும் பிரக்ஞானந்தாவை ஆரவாரத்துடன் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் பிரஞானந்தா சந்தித்தார். அப்போது தாம் வென்ற வெள்ளி பதக்கத்தை முதலமைச்சரிடம் கொடுத்து பெற்றுக் கொண்டார். அப்போது, தமிழக அரசு சார்பில் பிரக்ஞானந்தாவிடம் 30 லட்சம் ரூபாய் காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிலையில், பிரக்ஞானந்தாவை பாராட்டி செயல்தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இத்தகைய புத்திசாலித்தனமான இளம் மனதைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, சென்னைக்கு வெற்றிகரமாகத் திரும்பிய பிரக்ஞானந்தாவின் சாதனைகள் தமிழகத்துக்கும் முழு நாட்டிற்கும் பெருமை சேர்க்கிறது. பிரக்ஞானந்தாவுக்கு நினைவுப் பரிசு மற்றும் ரூ.30 லட்சம் பரிசும் வழங்கி கௌரவித்த பெருமை எனக்கு கிடைத்தது. விளையாட்டில் இளம் திறைமைசாலிகளை வளர்ப்பதில் எங்களுடைய அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது. வேகத்தைத் தொடருங்கள், வரவிருக்கும் சவால்களில் வெற்றி பெறுங்கள், பிராக் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் (CM Congratulates Praggnanandhaa) பதிவிட்டுள்ளார். இந்த ட்விட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply