CM Stalin Birthday : முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மார்ச் 1ம் தேதி இன்று பிறந்தநாள் காணும் முதல்வருக்கு பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 71வது பிறந்தநாளை (CM Stalin Birthday) கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வருகிறார். இதனிடையே முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் பிறந்தநாள் வாழ்த்து (CM Stalin Birthday) தெரிவித்துள்ளனர்.

CM Stalin Birthday - ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள் :

பிரதமர் நரேந்திர மோடி : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துக்கள் என பிரதமர் நரேந்திர மோடி தனது X சமூக வலைதள பக்கத்தில் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது X சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பினராயி விஜயன் : ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்புத் தோழர் மு.க.ஸ்டாலின்’ என கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான உங்கள் உறுதிப்பாடு மிகவும் ஊக்கமளிக்கிறது. நீங்கள் முடிவில்லா மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் தொடர்ந்து வெற்றி பெற விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் : மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டை சமூக ரீதியாக வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் அன்பிற்கினிய நண்பரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். நீதி, பெண்கள் மேம்பாடு, இளைஞர் நலன் மற்றும் தொழில் வளர்ச்சி ஆகியவற்றை வெற்றி பாதையில் கொண்டு செல்லும் ‘தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் : நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், முதல்வரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கட்சியின் அதிகாரப்பூர்வமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலினுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். விஜய் கட்சியின் எக்ஸ் தளத்தில் இதுவரை கட்சி தொடர்பான அறிவிப்புகள் மட்டுமே வெளியாகி வந்தன. இந்நிலையில், முதன்முறையாக ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக தலைவர் அன்புமணி : ‘இன்று 71வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நலமுடன் அவரது பொது வாழ்வு தொடர வாழ்த்துகிறேன்’ என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் : ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவர் நூறாண்டுகள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். சமூக நீதி உள்ளிட்ட தமிழக மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் வாழ்த்துக்கள்’ என பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் : முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை : “பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் நல்ல உடல் நலமுடனும், நீண்ட ஆயுளுடனும் அவரது பணி தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுமட்டுமில்லாமல் பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply