CM Stalin Inaugurated New Police Quarters : முதல்வர் ஸ்டாலின் புதிய காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்கள் திறந்து வைத்தார்

CM Stalin Inaugurated New Police Quarters :

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21/02/2024 அன்று தலைமைச் செயலகத்தில்  காணொலிக் காட்சி வாயிலாக 23 கோடியே 53 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 96 காவலர் குடியிருப்புகள், நான்கு காவல் நிலையங்கள் மற்றும் சென்னை, அசோக் நகரில் சிலை கடத்தல் பிரிவு காவல் நிலையம் ஆகியவற்றை திறந்து (CM Stalin Inaugurated New Police Quarters) வைத்தார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், காவல்துறை என்பது நாட்டில் குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், காவல்துறை ஆனது குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகவும் செயல்பட வேண்டும்.

CM Stalin Inaugurated New Police Quarters : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல்துறையின் பணிகள் சிறக்க ரூ.438.05 கோடி செலவில் 2637 காவலர் குடியிருப்புகள், ரூ.36.64 கோடி செலவில் 36 காவல் நிலையக் கட்டடங்கள், ரூ.69.83 கோடி செலவில் 14 காவல்துறை இதரக் கட்டடங்கள், உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.55.19 கோடி மதிப்பிலான 253 குடியிருப்புகள் ஆகியவற்றை காவல்துறையினரின் மேம்பாட்டிற்காக (CM Stalin Inaugurated New Police Quarters) திறந்து வைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக 21/02/2024 அன்று,

  • சென்னை மாவட்டத்தில் உள்ள நந்தம்பாக்கத்தில் 1 கோடியே 46 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் ஆனது திறக்கப்பட்டுள்ளது.
  • கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள H ரோட்டில் 16 கோடியே 57 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 96 காவலர் குடியிருப்புகள் ஆனது திறக்கப்பட்டுள்ளது.
  • கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இரத்தினபுரியில் 2 கோடியே 21 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் ஆனது திறக்கப்பட்டுள்ளது.
  • புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள  மழையூரில் 83 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் ஆனது திறக்கப்பட்டுள்ளது.
  • செங்கல்பட்டில் 1 கோடியே 18 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலையம் ஆனது திறக்கப்பட்டுள்ளது.
  • சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் 1 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையம் ஆனது திறக்கப்பட்டுள்ளது.

CM Stalin Inaugurated New Police Quarters : இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால், உள்துறை செயலாளர் அமுதா, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Latest Slideshows

Leave a Reply