CM Stalin Leaves For Spain : 8 நாள் பயணமாக ஸ்பெயின் புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்க்க 8 நாள் பயணமாக ஸ்பெயின் (CM Stalin Leaves For Spain) புறப்பட்டுள்ளார்.

CM Stalin Leaves For Spain :

வெளிநாட்டில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயின் (CM Stalin Leaves For Spain) புறப்பட்டுள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேசிய அவர், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றி பெற்றது. தற்போது நான் (ஸ்டாலின்) ஸ்பெயின் செல்கிறேன் வருகின்ற ஏழாம் தேதி மீண்டும் தமிழகம் திரும்புகிறேன். சமீபத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெற்றது. எனது கடந்தகால வெளிநாட்டுப் பயணம் பொறுத்தவரை, கடந்த 2022ல் ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று இருந்தேன். அந்த பயணத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய 6100 கோடி முதலீடுகள் பரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதேபோல் 2023 ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்ற பொழுது, 2000-க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கக்கூடிய முதலீட்டிற்காக 1342 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த, முதலீட்டாளர்கள் வணிக அமைப்புகள் தொழில் முனைவோர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்ககள். இந்த மாநாட்டில், தமிழகத்தில் நிலவுகின்ற சாதகமான சூழல், தமிழகத்தின் சிறப்பு அம்சங்களான உள்கட்டமைப்பு வசதிகள், மனித வளம் போன்றவற்றை எடுத்துரைத்து, இந்தியாவில் முதலீடு செய்ய சிறந்த இடம் தமிழகம் என்பதை எடுத்துரைக்க உள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் பேசிய ஸ்டாலின், இந்தப் பயணத்தின் போது ரோ.கா, கேஸ்டம் உள்ளிட்ட சில பெரிய தொழில் நிறுவனங்களுடனும், இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற முதலீட்டு நிறுவனத்துடனும் நேரடியாகப் பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளபட இருக்கிறது.

இந்தப் பயணத்தின் மூலம், ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதுடன், அந்நாடுகளிலிருந்தும் ஏராளமான முதலீடுகளை ஈர்க்க முடியும் என நம்புகிறேன். எனவே உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன் இந்த பயணம் வெற்றியடைய வேண்டும் என நினைக்கிறேன். தமிழகம் திரும்பியதும் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினை வழியனுப்ப விமான நிலையத்திற்கு திமுக அமைச்சர்கள், திமுக மக்களவை உறுப்பினர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக மூத்த நிர்வாகிகள் ஆகியோர் வந்தனர்.

Latest Slideshows

Leave a Reply