CM Trophy 2024 : முதலமைச்சர் கோப்பை 2024 போட்டி நிறைவு
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி 2024 (CM Trophy 2024) தற்போது நடந்து முடிந்த நிலையில், முதல் மூன்று இடம் பிடித்த அணிகளுக்கு ஸ்டாலின் பதக்கங்களை குடுத்து வாழ்த்தினார்.
CM Trophy 2024 : 15 நாட்களாக தொடர் போட்டி
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் சிலம்பம், கபடி போன்ற 36 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை போட்டியில் கலந்துகொள்ள ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மண்டல அளவிலான போட்டிகள் இந்த ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ஆறு மண்டலத் தலைமையகங்களில் நடைபெற்றன. இந்த போட்டிக்காக 83 கோடியே 36 லட்சம் ஒதுக்கப்பட்டது.
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட அளவிலான போட்டியை (10/09/2024) அன்று தொடங்கி வைத்தார். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வீரர்கள் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாநில அளவிலான போட்டியை முதலமைச்சர் ஸ்டாலின் 04/10/2024 அன்று சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் கோப்பைக்கான (CM Trophy 2024) மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னை, மதுரை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி ஆகிய 19 இடங்களில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரை நடைபெற்றது.
CM Trophy 2024 : முதல் மூன்று இடங்கள்
மாநில அளவிலான இறுதிப் போட்டியில் தமிழகத்தின் 38 மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் 1,071 பதக்கங்களை வெல்ல போட்டியிட்டனர். இதில் சென்னை மாவட்டம் 105 தங்கம், 80 வெள்ளி, 69 வெண்கலம் என மொத்தம் 254 பதக்கங்களையும், செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாமிடத்தையும், கோவை மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர். இப்போட்டிகளில் (CM Trophy 2024) வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். அப்போது பேசிய அவர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள். விளையாட்டை ஊக்குவிக்க, திறமையான வீரர்களை ஊக்குவிப்பது, விளையாட்டு போட்டிகள் நடத்துவது, மாணவர்களுக்கு உற்சாகம் அளிப்பது அவசியம். உங்கள் பிள்ளைகள் விளையாட்டில் ஆர்வமாக இருந்தால் அவர்களை என்கரேஜ் பண்ணுங்க என்று தெரிவித்துள்ளார்.
Latest Slideshows
- Children's Day 2024 : குழந்தைகள் தின வரலாறும் முக்கியத்துவமும்
- Miss You Teaser : சித்தார்த் நடித்துள்ள 'மிஸ் யூ' படத்தின் டீசர் வெளியீடு
- Shiva Rajkumar In Thalapathy 69 : தளபதி 69 படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்
- ITBP Recruitment 2024 : இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு பிரிவில் 526 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- ISRO Provide Navigation Signal : மொபைல் போனில் நேவிகேஷன் சிக்னல் வழங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது
- அரியலூரில் ரூ1000 கோடி முதலீட்டில் தைவானின் Teen Shoes நிறுவனம்
- Indian Team New Captain : இந்திய அணியின் கேப்டன் யார்? சஸ்பென்ஸ் வைத்த கம்பீர்
- Discovered A New Planet : பூமி மாதிரியே இருக்கும் புது கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
- Kanguva Trailer : சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
- Mushroom Benefits : தினமும் காளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்