CMRL Phase II : சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட அடிப்படை பணிகளுக்கு ரூ.168 கோடியில் ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்தில் உள்ள 5-வது வழித்தடத்தில் ரூ.168 கோடியில் அடிப்படை பணிகளுக்கான (CMRL Phase II) ஒப்பந்தம் 13/12/2024 அன்று நிறைவேற்றப்பட்டது. சென்னை மெட்ரோ 2-ம் கட்ட ரயில் திட்டம் 116 கி.மீ தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை மாநகரத்தை முழுமையாக இந்த வழித்தடம் கவர் செய்யும்.

● 45.4 கி.மீ – மாதவரம் To சிறுசேரி சிப்காட்
● 26.1 கி.மீ – கலங்கரை விளக்கம் To பூந்தமல்லி
● 44.6 கி.மீ – மாதவரம் To சோழிங்கநல்லூர்

மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் இந்த மூன்று வழித்தடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் இந்தப் பணிகளை செயல்படுத்தப்பட மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்தின் மின் மற்றும் இயந்திர அமைப்பு பணி

மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்காக ரூ.168 கோடி ஒப்பந்தத்தின் மூலம் 10 உயர்மட்ட நிலையங்கள், 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சாரம், தீ பாதுகாப்பு, காற்றோட்டம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ரூ.168 கோடி மதிப்பில் M/s Jakson Limited நிறுவனத்திற்கு மின் மற்றும் இயந்திர அமைப்பு (CMRL Phase II) பணிகளுக்கான ஒப்பந்தம்  வழங்கப்பட்டு உள்ளது.

மெட்ரோ ரயில் சேவைக்கு நல்ல வரவேற்பு (CMRL Phase II)

முதன் முதலில் 2007-ம் ஆண்டில் சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடங்கப்பட்டன. முதல்கட்ட மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்டன. தற்போது சென்னை விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரையும், சென்னை சென்ட்ரல் முதல் சென்னை பரங்கிமலை வரையும், மெட்ரோ ரயில் (CMRL Phase II) சேவைகள் ஆனது இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது 2 வழித்தடங்களில் முதலாம் கட்ட மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இதில் மாதம் தோறும் பயணம் செய்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கு (CMRL Phase II) ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி மாதவரம் – சிப்காட், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி, மற்றும் மாதவரம் – சோழிங்கநல்லூர் வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகளை அமைக்கும் பணிகள் ஆனது 2016-ம் ஆண்டு முதல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Latest Slideshows

Leave a Reply