Coimbatore Agricultural University Students Service : 69 ஆண்டுகளாக தொடரும் இலவச சேவை

Coimbatore Agricultural University Students Service - பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறார்களுக்கான இலவச பாடசாலை :

கோவை வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் நடத்தும் இலவச பாட சாலை (Coimbatore Agricultural University Students Service) ஆனது கடந்த 69 ஆண்டுகளாக தொய்வின்றி தொடர்ந்து கல்வி சேவையை வழங்கி வருகிறது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சமுதாய நற்பணி மன்றம் ஆனது மாலை நேர பாடசாலை மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி சேவையை வழங்கி வருகிறது. கடந்த 1954-ம் ஆண்டு ஒரு சிறிய முயற்சியாக பல்கலைக்கழக மாணவர் விடுதியில் இப்பணி ஆனது தொடங்கப்பட்டது. முதலில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பண்ணைத் தொழிலாளர்களுக்கு கையெழுத்திட கற்றுக் கொடுக்க இப்பணி ஆனது  தொடங்கப்பட்டது.

1970களில் வேளாண்மை பல்கலைக்கழக தொழிலாளர்கள் அவர்களது குழந்தைகளையும் இந்த மன்றத்துக்கு படிக்க அழைத்து வந்துள்ளனர். பண்ணைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆனது நாளடைவில் குறைந்தபோதும், இந்த கல்வி சேவையை நிறுத்தாமல், சுற்றுவட்டாரத்தில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பள்ளி மாணவர்கள் பயிலும் கல்வி பாடசாலையாக (Coimbatore Agricultural University Students Service) மாற்றியுள்ளனர்.

அசத்தும் கல்லூரி மாணவர்கள் :

சிறிய பள்ளிக்கூடம் போல தற்போது இயங்கிவரும் இந்த பாடசாலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களே ஆசிரியர்களாக (Coimbatore Agricultural University Students Service) பணியாற்றுகிறார்கள். இந்த பாடசாலையில் தினமும் மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முனைவர் பட்டம் வரை பயிலும் மாணவர்கள் வரை தன்னார்வலர்களாக இந்த சேவையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 120 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு பணியாற்றுகின்றனர். தமிழ், ஆங்கில மொழி வழியில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. தற்போது இந்த பாடசாலையில் 150 பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். அனைத்து பாடப்பிரிவுகளிலும் அந்த மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுகின்றன.

இந்த பாடசாலையில் கல்வி பாடம் பயிற்றுவித்தவர்கள் மட்டுமல்லாமல் இங்கு கல்வி பாடம் பயின்ற மாணவர்கள் பலரும் தற்போது மத்திய, மாநில அரசு பணிகளில் உயர் பொறுப்புகளில் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக சமுதாய நற்பணி மன்றத்தின் செயலாளராக மாணவர் நிதிஷ்குமார், இணைச் செயலாளராக மாணவர் அருண் ஆகியோர் செயல்படுகின்றனர். இந்த பாடசாலையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் மாணவர்களேதான் ஒருங்கிணைக்கின்றனர் மற்றும் பாடசாலையையும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.கீதாலட்சுமி உரை :

இந்த சமுதாய நற்பணி மன்றம் ஆனது படிக்கும்போதே மாணவர்கள் மத்தியில் சேவை மனப்பான்மைக்கு வித்திட்டுவரும் சிறந்த சமுதாய நற்பணி மன்றம் ஆகும். கோவை தெலுங்குபாளையம் பகுதியிலும் இதேபோல பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டதால்  இந்த பாடசாலையின் கிளையானது கடந்த 1989-ம் ஆண்டு முதல் அங்கு செயல்பட்டு வருகிறது. அதற்கு பொது இடத்தை தெலுங்குபாளையம் மக்களே ஒதுக்கித் தந்தனர். இந்த சேவையில் இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முனைவர் பட்டம் வரை பயிலும் மாணவர்கள் வரை தன்னார்வலர்களாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த பாடசாலையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் மாணவர்களேதான் ஒருங்கிணைக்கின்றனர். பாடசாலையையும் மாணவர்களேதான் வெற்றிகரமாக (Coimbatore Agricultural University Students Service) நடத்தி வருகின்றனர். நாங்கள் மாணவர்களுக்கு ஆலோசனை மட்டுமே வழங்குகிறோம். இவ்வாறு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.கீதாலட்சுமி கூறினார்.

Latest Slideshows

Leave a Reply