Coimbatore International Engineering Exhibition : கோவையில் சர்வதேச பொறியியல் கண்காட்சி

கோவையின் கொடிசியா வர்த்தக கண்காட்சி மையத்தில் மார்ச் 4ல் துவங்கி 6ம் தேதி வரை சர்வதேச பொறியியல் கண்காட்சி (Coimbatore International Engineering Exhibition) ஆனது நடைபெற உள்ளது. இந்த சர்வதேச பொறியியல் கண்காட்சியை பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம் இந்தியா (EEPC) ஆனது வர்த்தக கண்காட்சி (Coimbatore International Engineering Exhibition) அரங்கில் மூன்று நாட்களுக்கு (March 4  – March 6) நடத்த உள்ளது. EEPC-யின் தேசிய மண்டல தலைவர் ராமன்ரகு, வர்த்தகமேம்பாட்டு இயக்குனர் குருவிந்தர் சிங், ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், துணை ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரி மற்றும் சி.என்.நாடிகர் ஆகியோர் நிருபர்களிடம், “பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம் ஆனது இந்தியாவின் ஆண்டு நிகழ்வான சர்வதேச பொறியியல் கண்காட்சியின் பதினோராவது நிகழ்ச்சியை கோயம்புத்தூர் அவிநாசி சாலையிலுள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி மையத்தில் மார்ச் 4ல் துவங்கி 6ம் தேதி வரை நடத்துகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

Coimbatore International Engineering Exhibition - இந்த சர்வதேச பொறியியல் கண்காட்சி ஆனது :

  • உலோகம் மற்றும் உலோகம் சார்ந்த பொறியியல் துறையில் நம் நாட்டின் திறன்களை சர்வதேச கொள்முதலாளர்களுக்கு எடுத்துக்காட்டும்
  • நம் நாட்டிற்குள் புதிய சந்தைகளை உருவாக்கும்
  • நம் நாட்டு வர்த்தக கூட்டாளிகளுக்கிடையேயான வணிக உறவுகளை வலுப்படுத்தும்
  • வெளிநாட்டு சந்தையில் நம் திறன்களையும் மற்றும் வளங்களையும் காட்சிப்படுத்தும்
  • நமது உள்நாட்டு பொறியியல் திறன்களை உலகத்துக்கு எடுத்துக்காட்டும்.

இந்த சர்வதேச பொறியியல் கண்காட்சியில் :

  • ஜெர்மன் நாட்டின் சாக்சன் மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் தலைமையிலான குழு ஆனது 13 அறிவுசார் கருத்தரங்குகளில் பங்கேற்கிறது.
  • தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), பாதுகாப்பு உற்பத்தித்துறை, TATA Steels, Siemens, National Institute Of Design, ONGC, German Glass, Automation Association, ஏதர், சி.எம்.டி.ஐ.-பெங்களூர், CSIR, CRRI, மின்வாகன கூட்டமைப்பு, எஸ்.எஸ்.இ.எம், ஜாகுவார் மற்றும் லேண்டுரோவர் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
  • 149 பொறியியல் பொருட்களை 139 உற்பத்தியாளர்கள் காட்சிப்படுத்துவர்.
  • 10,000 வர்த்தகர்கள் வருகை தருவர்.
  • 40 நாடுகளை சேர்ந்த 300 வெளிநாட்டு கொள்முதலாளர்கள் வருகை தருவர்.
  • உற்பத்தி ஸ்டார்ட் அப்கள், தொழில்நுட்ப உரைகள், திறன்மிகு உற்பத்திக்கான பட்டறைகள் மற்றும் சர்வதேச கொள்முதல் சந்திப்புகள் ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் பிரச்சனைகளை தீர்க்கும் ஆலோசனைகள் ஆனது சர்வதேச பொறியியல் கண்காட்சியில் இடம் பெறும்.

Latest Slideshows

Leave a Reply