Coins Redeemed Through UPI : பயணச்சீட்டு விவரங்களை தெரிவித்து சில்லறைகளை UPI மூலம் பெறலாம்

இனி பஸ்ல மீதி சில்லறை வாங்கவில்லையே என்ற கவலையே வேண்டாம். தமிழ்நாடு அரசு ஆனது பயணச்சீட்டு விவரங்களை தெரிவித்து சில்லறைகளை UPI மூலமாக (Coins Redeemed Through UPI) பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. அதிக அளவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மக்கள் மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட தமிழ்நாடு அரசு பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் ஆனது அதிகரிக்கப்பட உள்ளது. அதேபோல் நடத்துனரும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை அதிக அளவில் வாங்க ஊக்குவிக்கப்பட உள்ளனர். தமிழ்நாட்டில் போக்குவரத்து துறையின் பேருந்து சேவை மூலமாக லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டின் நகரம், மாவட்டம், மாநிலம் என பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.

பேருந்துகளில் பயணம் செய்யும் பலர் சில நேரங்களில் டிக்கெட் எடுக்கும் போது 10 ரூபாய் டிக்கெட்டிற்கு 100 ரூபாய் கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் சில்லறை வந்ததும் மீதி காசை தருவதாக நடத்துனர் கூறுவார். இதில் பலரும் டிக்கெட்டிற்கான மீதி பணத்தை வாங்க மறந்து பாதியிலே இறங்கி விடுவார்கள். ஆனால் பஸ்ஸில் மீதி சில்லறையை வாங்காமல் இறங்கி விட்டோமே என இனிமேல் கவலைப்பட வேண்டாம். நாம் வாங்க மறந்த பணத்தை ஒரு சின்ன செயல் மூலம் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

Coins Redeemed Through UPI - பயணிகள் பஸ் பயணத்தின் போது வாங்க மறந்த சில்லறை பணத்தை திரும்ப பெற தமிழ்நாடு அரசு புதிய திட்டம்

இந்த புதிய திட்டத்தின்படி பயணிகள் பஸ் பயணத்தின் சில்லறை பணத்தை வாங்காமல் மறந்து, பஸ்ஸை விட்டு கீழே இறங்கி விட்டால் 1800 599 1500 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மீதி சில்லறையை பெற்றுக்கொள்ளலாம். இதனால் பயணிகளின் வங்கி கணக்கிற்கே சில்லறை பணம் திரும்ப வரும். TNSTC-இன் இந்த இலவச எண் (Toll Free எண்) 1800 599 1500ஐ பயணிகள் தொடர்பு கொண்டு பயணச்சீட்டில் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும் பஸ் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் மற்றும் எந்த இடத்தில் ஏறி, இறங்குகினோம் என்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் TN போக்குவரத்து துறை பயணிகள் பயணம் செய்த பேருந்தின் நடத்துனரை தொடர்பு கொண்டு பயணிகளின் விவரங்கள் மற்றும் நம்பகத்தன்மை குறித்து கேட்டு சரிபார்க்கும். எல்லா தகவல்களும் சரிபார்க்கப்பட்ட பின்னர் Gpay மூலமாக (Coins Redeemed Through UPI) பயணிகளின் பணம்  திரும்ப அனுப்பி வைக்கப்படும். UPI (UNIFIED PAYMENTS INTERFACE) வழியாக இந்த சில்லறை பயணிகளுக்கு கொடுக்கப்படும். இதனால் ஒரு கால் பண்ணினால் போதுமானது பயணிகளின் வங்கி கணக்கிற்கே பணம் வரும். பஸ் பயணத்தின் போது சில்லறை வாங்க மறந்து விட்டோமே என்ற கவலை இனி எந்த பயணிகளுக்கும் ஏற்படாது.

Latest Slideshows

Leave a Reply