Commonwealth Games Series: 2026 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுத் தொடரை நடத்தும் அகமதாபாத்...

காமன்வெல்த் விளையாட்டு தொடர் :

காமன்வெல்த் தொடரை நடத்தும் உரிமையிலிருந்து தற்போது விலகுவதாக விக்டோரியா மாகாண அரசு அறிவித்தது. இதனால் 2026 ஆம் ஆண்டு போட்டியை நடத்தும் உரிமை யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஆதிக்கத்திலிருந்து மீண்டு வந்த நாடுகள் காமன்வெல்த் என்னும் போட்டியை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்த்தும். இந்தப் போட்டிகள் கடந்த 1930 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. கடைசியாக 2022 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டி 22 ஆவது காமன்வெல்த் போட்டியாகும். அதில் 72 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்ததாக காமன்வெல்த் தொடர் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. முதலில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் 20 வகையான விளையாட்டுப் போட்டிகளும் சில பாரா போட்டிகளும் இங்கு நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியா விலகி உள்ளது.

விக்டோரியா மாகாண அரசு விலகல் :

இந்த நிலையில் திடீரென விக்டோரியா மாகாண அரசு இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அடுத்தது யார் நடத்த போகிறார்கள் என்னும் சந்தேகம் எழுந்துள்ளது. போட்டியை நடத்த அதிக பட்ஜெட் தேவைப்படுவதால் இந்த உரிமையில் இருந்து விலகுவதாக அந்த நிர்வாகம் தெரிவித்தது. இது போன்ற கடினமான தருணங்களில் இந்த முடிவை எடுக்க மிகவும் வருத்தமாக உள்ளது என கூறினர்.

இதனால் அந்த ஏலத்தை நம் அகமதாபாத் நிர்வாகம் எடுக்க உள்ளதாக சில தகவல்கள் வெளிவந்து உள்ளன. ஏற்கனவே குஜராத் மாநிலம் அடுத்த 2036 ஆம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியை நடத்த முயற்சி செய்து வருவதாக தெரிவித்திருந்தது. இதனால் நரேந்திர மோடி மைதானத்தை தீவிரமாக சரி செய்யும் பணிகள் மேற்கொண்டு வருகின்றன. மேலும் இந்த மைதானத்தை உலக தரத்தில் தயார் செய்ய தற்போதையிலிருந்து வேலை நடந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் 2030 ஆம் ஆண்டு நடைபெற இருந்த காமன்வெல்த் போட்டியை நடத்தும் உரிமையை கைப்பற்ற திட்டமிருந்தது. எதிர்பாராத விதமாக இந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் வெளியேறி உள்ளதால் குஜராத் அரசு இந்த ஏலத்தை எடுக்க தீவிரமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Latest Slideshows

Leave a Reply