Competence Exports Private Limited ரஷ்யாவுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி ஏற்றுமதி செய்கிறது

Competence Exports Private Limited அனைத்து விதமான தட்பவெப்ப நிலையும் தாங்கும் திறன் கொண்ட பிரத்யேக ஷூக்களை தயாரிக்கிறது. இந்தியாவின் பீகாரில் இந்த நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் ரஷ்யாவில் உள்ள ராணுவம், கம்பெனிகளுக்கும் மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கும் ஷூக்களை ஏற்றுமதி செய்து வருகிறது. Competence Exports Private Limited  தொழிற்சாலை 2018-ல் ஆரம்பிக்கப்பட்டது.

Competence Exports Private Limited அரசு சாரா நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டு, ROC டெல்லியில் உள்ள நிறுவனங்களின் பதிவாளரில் 05 மார்ச் 1999 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு தனியார் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.50,000,000 மற்றும் அதன் செலுத்தப்பட்ட மூலதனம் ரூ.11,700,000 ஆகும். தனேஷ் பிரசாத், கௌரவ் குமார் மற்றும் மனிதா குமாரி ஆகியோர் Competence Exports Private Limited இயக்குநர்கள் ஆவர்.

தற்போது இந்த நிறுவனம் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பாதுகாப்பான ஷூக்களை தயாரித்து ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான ரஷ்யா ஆனது கச்சா எண்ணெய் ஏற்றுமதி, இயற்கை எரிவாயு என பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் முன்னிலையில் உள்ளபோதும் இந்தியாவின் பீகாரில் உள்ள Competence Exports Private Limited நிறுவனத்தில் இருந்துதான் ரஷ்ய ராணுவத்திற்கு தேவையான காலணிகளை பெறுகிறது.

Competence Exports Private Limited - ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யும் ஷூக்களின் சிறப்பம்சங்கள் :

  • ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யும் இந்த ஷூக்கள் ஆனது லைட் வெயிட் மற்றும் கடுமையான தட்பவெப்ப நிலையிலும் நீடித்து உழைக்க கூடிய வகையில் தயாரிக்கப்படுகின்றன.
  • ரஷ்யாவில் 40 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலை வரை குளிர் நிலவும் என்பதை கவனத்தில் கொண்டு இந்த ஷூக்கள் தயாரிக்கப்படுகின்றன.
  • மேலும் ரஷ்ய வீரர்கள் இந்த ஷூக்கள் அணிந்து செல்லும் போது கால் வழுக்காமல் இருக்கும் வகையிலும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ரஷ்யாவுக்கு ஆண்டுக்கு 1.5 மில்லியன் ஜோடி ஷூக்கள் ரூ.100 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.   

நிறுவனத்தின் பொது மேலாளர் ஷாயிப் குமார் உரை :

நிறுவனத்தின் பொது மேலாளர் ஷாயிப் குமார், “Competence Exports Private Limited தொழிற்சாலை ஆனது 2018-ல் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனம் ரஷ்யாவுக்கு ஷூக்களை ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பாதுகாப்பான ஷூக்களை தயாரித்து ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. ரஷ்யா மட்டும் இன்றி ஐரோப்பிய நாடுகளின் சந்தைகளுக்கும் இந்த Competence Exports Private Limited நிறுவனத்தின் ஷூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனம் ஆண்டுக்கு 1.5 மில்லியன் ஜோடி ஷூக்களை ரூ.100 கோடி மதிப்பில் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. Competence Exports Private Limited ஆனது இந்த ரூ.100 கோடி மதிப்பை இரு மடங்கு ஆக்குவதை இலக்காக கொண்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply