Complaint Against Vijay To Chennai Commissioner : நடிகர் விஜய் மீது சென்னை கமிஷனரிடம் புகார்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் (Complaint Against Vijay To Chennai Commissioner) அளித்துள்ளார். அதில் நடிகர் விஜய் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்கு வந்ததாக சமூக ஆர்வலர் குற்றம் சாட்டியுள்ளார்.

வாக்களித்த விஜய் :

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட நீலாங்கரை வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் நேற்று முன்தினம் வாக்களித்தார். ரஷ்யாவில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த அவர், வாக்களிக்க நேற்று முன்தினம் காலை சென்னை வந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி மதியம் 12.15 மணியளவில் வாக்குச்சாவடிக்கு சென்றார். பனையூர் அருகே உள்ள அவரது வீட்டில் இருந்து காரில் வந்த அவரை  ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்தனர். இதையடுத்து, வாக்குச்சாவடிக்குள் வாக்களிக்கச் சென்ற அவர், வாக்களித்துவிட்டு மீண்டும் காரில் ஏற முடியாமல் போராடினார். அப்போது அங்கு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டாலும் திடீரென கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறப்பட்டது. அதனால்தான் விஜயை விரைவாக வாக்களிக்க செய்து திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

Complaint Against Vijay To Chennai Commissioner :

இந்நிலையில், விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் படி, நான் மேற்கண்ட முகவரியில் சமூக ஆர்வலராக பணி செய்து வருகிறேன். இரு சக்கர வாகன பேரணி, சாலை பேரணி நடத்த  தமிழக காவல் துறை மூலமாக எந்த கட்சிக்கும், இயக்கத்திற்கும், அமைப்புக்கும் அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தேர்தல் விதிகளை மீறி நீலாங்கரையில் வாக்களிக்கும் அவரின் வாக்குசாவடியில் 200க்கும் மேற்பட்ட நபர்களை அத்துமீறி கூட்டினார். இது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் வரை 10க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடி வரக்கூடாது என்ற விதியை மீறுவதாக உள்ளது. நடிகர் விஜய் தனது சுயநல விளம்பரத்திற்காக நீலாங்கரை மக்களுக்கு இடையூறாக செயல்பட்டு போக்குவரத்து விதிமீறல்களில் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி இளைஞர்கள் மத்தியில் தவறான நோக்கத்தை கொண்டு வருகிறார்.

நடிகரும் த.வெ.க.தலைவருமான விஜய் வாக்குசாவடியில் வாக்களிக்க காத்திருந்தவர்களை அவமதித்து வரிசையில் நின்று வாக்களிக்காமல் காவல் துறையினரின் உதவியுடன் தனது வாக்கை செலுத்தினார். கட்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே அவர் இப்படி செய்வது சரியல்ல, அவமானம். இப்படி செயல்படுவது மாற்று அரசியலா? அரசியல் பழகும் இளைய தலைமுறைக்கு இவர் கொடுக்கும் அரசியல் பாடம் இதுதானா? இவருடைய படம் வெளியாகும் போது பால் பாக்கெட்டை திருடி கட்அவுட்டுக்கு அபிஷேகம் செய்யும் இளைஞர்களை இவரா நல்வழிப்படுத்துவார். எனவே, தேர்தல் வீதிகளை மீறிய த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் மீது இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி  143, 290, 357, 171 (F) பிரிவுகளின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று புகார் (Complaint Against Vijay To Chennai Commissioner) அளிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply