Conjuring Kannappan Movie Review : 'கான்ஜூரிங் கண்ணப்பன்' படத்தின் திரைவிமர்சனம்

Conjuring Kannappan Movie Review : அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படம் நேற்று அதாவது டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகியுள்ளது. சதீஷுடன் சரண்யா பொன்வண்ணன், ரெஜினா, நாசர், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் ஏற்கனவே எக்கச்சக்க பேய் படங்கள் வெளிவந்தாலும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நிச்சயம் திருப்தி தரும் படமாக அமையும் என ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. கான்ஜுரிங் கண்ணப்பன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை தற்போது (Conjuring Kannappan Movie Review) காணலாம்.

படத்தின் மையக்கருத்து :

கதாநாயகன் சதீஷ் தனக்குக் கிடைக்கும் ட்ரீம் கேச்சரில் இருந்து ஒரு இறகினை தெரியாமல் பறித்துத் தனியாக வீசுகிறான். இது அவருக்கு ஒரு கெட்ட கனவை அளிக்கிறது. இதைப் பற்றி சதீஷ் முதலில் அமானுஷ்ய ஆய்வாளராக நாசர் மற்றும் மனநல மருத்துவர் ரெடின் கிங்ஸ்லி ஆகியோரிடம் கூறுகிறார். நாசரை நம்பாத சதீஷ் ரெடின் கிங்ஸ்லியின் மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றுகிறார். ஆனால் தூங்கிய உடனே வரும் கெட்ட கனவில் சதீஷுக்கு அடிபட்டால், கனவு முடிந்து நிஜ வாழ்க்கையிலும் அவருக்கு அடிபட்டு இருக்கும்.

இதை பார்த்த சதீஷ் மிகவும் பயந்து பின்னர் நாசர் சொல்வதை நம்புகிறார். சதீஷ் கனவில் தனக்கு துணைக்கு ஆட்கள் வேண்டும் என ஆனந்த் ராஜ் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோரை ட்ரீம் கேச்சரில் இருந்து இறகினை பிரித்தெடுக்க வைத்து விடுகிறார். ஆனால் சதீஷ், அவரது குடும்பத்தினர், அம்மா சரண்யா பொன்வண்ணன், அப்பா விடிவி கணேஷ், மாமா நாடோடிகள் சின்னமணி என இவர்களும் ஆளுக்கொரு இறகினை பிரித்து எறிந்து விட அனைவரும் கனவில் வரும் பேயிடம் சிக்கிக் கொள்கிறார்கள். நாசர் மற்றும் அவரது உதவியாளர் ரெஜினா அவர்களை காப்பாற்ற முயற்சிக்கின்றனர். இறுதியில் அவர்கள் கனவில் வரும் பேயிடமிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பது மீதிக்கதையாகும்.

Conjuring Kannappan Movie Review :

Conjuring Kannappan Movie Review : தமிழ் சினிமாவில் பேய் கதைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், இந்தப் படத்தில் காரணம் மற்றும் கதைக்களம் சற்று வித்தியாசமாக இருந்தது. கதைக்கருவுக்கு ஏற்ற நேர்த்தியான திரைக்கதை இருந்திருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும். படத்தை நகைச்சுவையாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர். ஆனால் பல இடங்களில் எடுபடவில்லை. தமிழ் சினிமாவில் பேய் பங்களா தேவை என்று படக்குழுவினரும் பேய் பங்களாவை தேடி பிடித்தார்களா அல்லது அந்த பங்களாவை பார்த்து பேய் கதையை எழுதினார்களா என்று தெரியவில்லை. சதீஷ் மற்றும் சரண்யாவின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. பாடல்கள் இல்லாவிட்டாலும், ஆடும் காட்சிகளில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் திகிலூட்டுகிறது. பங்களாவுக்குள் படம் நடப்பதால் எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு ஓகே தான். கதைக்களத்திற்கு ஏற்ற கதை வசனம் எழுதப்பட்டு இருந்தால் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ கொடி நாட்டி (Conjuring Kannappan Movie Review) இருப்பார்.

Latest Slideshows

Leave a Reply