Coolie Movie Story Change : கூலி படத்தின் கதையில் மாற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி

நடிகர் ரஜினியிடம் லோகேஷ் கனகராஜ் கூறிய கூலி படத்தின் (Coolie Movie Story Change) கதைக்களத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் கூலி படத்தில், ரஜினி தற்போது நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், செளபின் சஹீர், ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். கூலி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது.

கூலி படத்தின் கதையில் மாற்றம் (Coolie Movie Story Change)

முன்னதாக கூலி படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அவர் கூறியதாவது, என்னுடைய நண்பர் ஒருவரை வைத்து எடுக்க நினைத்த படம் இது. ரஜினியிடம் இந்த ஐடியாவை சொன்னேன், நான் சொன்ன இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால் அவர் என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார். இந்த கதையே எனக்கு சவாலானது (Coolie Movie Story Change) தான் இந்த மாதிரியான ஒரு படத்தை நானும் இதுவரை இயக்கியதில்லை. இந்த படத்தின் சில காட்சிகளை ஐமேக்ஸ் கேமராவில் எடுக்கலாம் என திட்டமிட்டுள்ளோம். இந்த கதையில் ரஜினிகாந்தின் கேரக்டர் கெட்டவன் நல்லவன் என்று இல்லாமல் ஒரு கிரே ஷேடில் இருக்கக்கூடிய கதாபாத்திரமாக இருக்கும் என லோகேஷ் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய எடுக்கப்படும் கூலி படத்தின் (Coolie Movie Story Change) கதை வேற என்றும் ரஜினியிடம் லோகேஷ் கனகராஜ்  சொன்ன கதை வேற என்றும் வித்தியாசமாக இருப்பதாகவும் லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் ஐமேக்ஸ் கேமராவில் படம் எடுப்பேன் என சொன்ன கதை வேற. அந்தக் கதைக்கும் நிறைய நேரம் தேவைப்பட்டது. அந்தக் கதை சொல்லும் போது நான் இருந்தேன். அந்தக் கதையை ஐமேக்ஸ் கேமராவில் படமாக்க லோகேஷ் விரும்பினார். அந்தக் கதை ஹாலிவுட் படத்திற்கே சவால் விடும் ஒரு கதை. லோகேஷ் இப்படி ஒரு கதையை எப்படி யோசித்தார் (Coolie Movie Story Change) என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் இந்த படத்திற்கு இந்தியா முழுவதிலிருந்தும் நடிகர்கள் தேவைப்பட்டார்கள். ஆனால் தயாரிப்பு நிறுவனம் ஆறு மாதத்தில் ரிலீஸ் கேட்டார்கள். இதனால் அவர் இந்த கதையை விட்டு வேறொரு கதையை எடுக்க முடிவு செய்தார். எதிர்காலத்தில் வேண்டுமானால் அவர் அந்த கதையை இயக்க வாய்ப்பு இருக்கிறது என்று மனோஜ் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply