Cooperative Society Job : டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் (Cooperative Society Job) காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு 2257 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூட்டுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு பண்டகசாலை, நகர கூட்டுறவு வங்கி பணியாளர், கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் விற்பனையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த கூட்டுறவு சங்கங்களில் (Cooperative Society Job) தற்போது 2257 செயலர், உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Cooperative Society Job :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : செயலர், உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப 2257 காலியிடங்கள் (Cooperative Society Job) அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வி தகுதி (Educational Qualification) : இளங்கலை பட்டப்படிப்புடன் (UG) கூட்டுறவு பயிற்சி முடித்து இருக்க வேண்டும். ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள், ராணுவத்தால் வழங்கப்படும் பட்டப்படிப்பு முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். மேலும் கூட்டுறவு பயிற்சியை பொறுத்தவரை தமிழ்நாடு ஒன்றிய கூட்டுறவு சங்கம் மூலம் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவு பயிற்சி, சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயர் மேலாண்மை பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வயதுத் தகுதி (Age) : 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் மேலும் எஸ்.சி/ எஸ்.டி/ பி.சி/ எம்.பி.சி/ பி.சி.எம் உள்ளிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : கூட்டுறவு சங்கங்களுக்கு (Cooperative Society Job) ஏற்ப சம்பளம் நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- எழுத்து தேர்வு நடைபெறும் நாள் (Exam Date) : 24.12.2023 தேதி இந்த உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த உதவியாளர் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்ப கட்டணம் (Application Fees) : இந்த உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்க கடைசி நாள் (Last Date) : இந்த உதவியாளர் காலிபணியிடங்களுக்கு 01.12.2023 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
- மேலும் விவரங்களுக்கு : அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். உதாரணமாக சென்னை மாவட்ட கூட்டுறவு சங்கத்திற்கான அறிவிப்பை தெரிந்துக் கொள்ள https://cooperativercs.s3.ap-south-1.amazonaws.com/Notification/32_Notification_1.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
Aalavandhan Trailer : ஆளவந்தான் ரீ-ரிலீஸ் | மிரட்டலாக வெளியான ட்ரெய்லர்
-
Kedar Jadhav : கேதார் ஜாதவ் அடிப்படை விலை இரண்டு கோடியா?
-
Naveen ul haq : நான் விராட் கோலியை திட்டவே இல்லை
-
Vijayakanth Health Condition : விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள நல்ல செய்தி
-
Saba Nayagan Trailer : அசோக் செல்வன் நடித்துள்ள சபா நாயகன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
-
Artemis 3 திட்டத்தில் நாசா 2027-ம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டம்
-
Green Credit : 2028 இல் COP33 ஐ நடத்த இந்தியா விரும்புகிறது | COP28 இல் பிரதமர் மோடி அறிவிப்பு
-
International Day Of Disabled Persons 2023 : ஸ்டாலின் நலத்திட்ட நிதியை உயர்த்தி பெருமிதம்
-
Ragi Flour Benefits : கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ குணங்கள்
-
அரிதாக காணப்படும் Mole என்ற ஒரு பாலூட்டி