Corn Benefits And Side Effects: மக்காசோளத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்
சோளம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது மக்காசோளம் தான். மலிவான விலையில் அனைத்து இடங்களிலும் கிடைக்கக் கூடியதுதான் இந்த மக்காசோளம். இவற்றின் இன்னொரு வகையான ஸ்வீட் கான் நிறைய மக்களின் விருப்பமான ஒரு உணவு பொருளாக இருக்கிறது. ஆனால் இவற்றை சாப்பிட்டால் நன்மையா, தீமையா, இதை யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிட கூடாது. முக்கியமாக மக்காசோளத்தில் கிடைக்கும் நன்மைகள் ஸ்வீட் கானிலும் கிடைக்குமா என்றெல்லாம் நிறைய சந்தேகங்கள் இருக்கும். அவற்றின் அனைத்து சந்தேகத்திற்கான விடையை இப்பதிவில் பார்க்கலாம்.
மக்காசோளத்தின் சத்துக்கள்:
உடலுக்கு அதிக ஆற்றலையும், பலத்தையும் அளிக்க கூடியது மக்காசோளம். இதிலுள்ள சத்துக்கள் இரும்பு சத்து, போலிக் அமிலம், ஒமேகா3, மேக்னிஷியம், மாங்கனீஸ், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுமட்டும் இன்றி செலினியம் என்னும் முக்கியமான சத்தும் இதில் நிறைந்துள்ளது. இதன் நன்மைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
Corn Benefits And Side Effects:-
மக்காசோளத்தின் நன்மைகள் (Corn Benefits):
மக்காசோளத்தில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்திற்கு செல்லக் கூடிய இரத்த நாளங்களில் கொழுப்புகள் படியாமல் தடுத்து சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுவதால் இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இதிலுள்ள மக்னீசியம் சத்தும் இதயத்தின் சீரான இதய துடிப்பை உறுதி செய்வதோடு எலும்புகளின் அடர்த்தி மற்றும் உறுதி தன்மையை அதிகப்படுத்துகிறது.
இதிலுள்ள பாஸ்பரஸ் சத்து சீறுநீரகங்களில் சீரான செயல்பாடு மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் தயாமின் சத்து நரம்புகள் சீராக இயங்க உதவுகிறது. மக்காசோளத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தயாமின் மற்றும் நியாசின் சத்துக்கள் கிடைக்கப் பெற்று நியாபக மறதி நீங்கும்.
100 கிராம் சோளத்தில் 365 கலோரிகள் உள்ளது. எனவே மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க தினமும் மக்காசோளத்தை சாப்பிட்டு வந்தால் எடையை அதிகரிக்க முடியும் அதேசமயம் உடல் எடை அதிகமுள்ளவர்கள் வாரம் ஒருமுறை மட்டும் அளவாக சாப்பிட்டால் போதும்.
மக்காசோளத்தில் வைட்டமின் பி6, போலிக் அமிலம், இருப்புச் சத்து போன்றவை நிறைந்துள்ளதால் இது உடலில் இரத்த அணுக்களை உற்பத்தி செய்கிறது. எனவே ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் தினமும்கூட சோளத்தை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து இரத்த சோகை குறைபாடு விரைவில் நீங்குவதாக பல முறை மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
கண்புரை குறைபாடு ஏற்படுவதை குறைக்கும் வீட்டா கரோட்டின் சத்து இதில் அதிகம் உள்ளது. எனவே சோளம் சாப்பிடுவது கண்களுக்கு மிக நல்லது. பைட்டோ கெமிக்கல் என்னும் வேதிய பொருள் இதில் நிறைந்துள்ளது. இது உடலில் இயற்கையாக உற்பத்தியாகும் இன்சுலின் சுரப்பை சீராக வைத்து சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் திடீரென சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் ஆபத்தான நிலையை தடுக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் மக்காசோளத்தை அளவாக எடுத்துக்கொள்ளலாம்.
மக்காசோளத்தை வேகவைத்து சாப்பிடுவதால் அதிலுள்ள நார்ச்சத்து முழுமையாக உடலுக்கு கிடைக்கிறது. இதனால் மூலநோய் ஏற்படாமல் தடுக்கிறது. அதுமட்டுமின்றி இந்த நார்ச்சத்து குடல் மற்றும் வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. கருவுற்ற பெண்கள் அடிக்கடி சோளம் சாப்பிட்டு வருவது நல்லது காரணம் இதில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. இந்த சத்து அவர்களுக்கு வேண்டிய முக்கிய சத்தாகும். இது வயிற்றில் வளரும் குழந்தையின் சீரான மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும, அறிவு வளர்ச்சிக்கும் தேவையான சத்தாகும்.
மக்காசோளத்தின் தீமைகள் (Corn Side Effects):
மக்கா சோளத்தின் தீமைகள் என்று பார்த்தால் சர்க்கரை நோயாளிகள் தினமும் நிறைய எடுத்துக்கொள்ள கூடாது இதில் கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ளதால் தினமும் சாப்பிடுவதை தவிர்த்து வாரத்தில் இருமறை என்று அளவாக எடுத்துக்கொள்வது நல்லது.
உடல் எடை அதிகம் உள்ளவர்களும் தினமும் சாப்பிட கூடாது. அதிக கலோரி உள்ள இது எடையை அதிகரிக்கும். அதே போன்று வாயு தொல்லை உள்ளவர்கள் அதிகம் சாப்பிட கூடாது.இதிலுள்ள ஸ்டார்ச் உங்களுக்கு உள்ள வாயு தொல்லையை அதிகப்படுத்தும். சர்ம ஒவ்வாமை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
ஸ்வீட் கான் (Sweet Corn Side Effects):
ஸ்வீட் கான் சாப்பிட்டால் இதே பலன்கள் கிடைக்கும் என்று சிலர் நம்புகின்றனர். ஆனால், அது தவறு ஸ்வீட் கானை சாப்பிட்டால் பலன்கள் கிடைக்காது. காரணம் ஸ்வீட் கான் என்பது முற்றிலும் மரபணு செய்யப்பட்ட (Hybrid) சோளமாகும். அது நாவிற்கு சேவையே தவிர வேறு எந்த பலனும் இல்லை என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.