Credit Limit Of Mudra Loan Increased : Mudra Loan திட்டத்தின் கடன் வரம்பு அதிகரிக்கப்பட்டது

மத்திய அரசு ஆனது சிறு தொழில் தொடங்க உள்ள தொழில் முனைவோர்களுக்கு சாதகமாக முத்ரா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முத்ரா திட்டம் ஆனது அமுல்படுத்தப்பட்டது. மத்திய அரசு ஆனது இந்த முத்ரா திட்டத்தின் கீழ் எந்த ஒரு பிணையமும் இல்லாமல் தொழில் முனைவோர்களுக்கு கடன் அளித்து வருகிறது. அதிகபட்சமாக இந்த முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை கடன்கள் அளித்து வருகிறது. தற்போது முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு ஆனது அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பட்ஜெட் அறிவிப்பிற்கு பிறகு இந்த கடன்தொகை ஆனது அதிகபட்சமாக (Credit Limit Of Mudra Loan Increased) ரூ.20 லட்சம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை, விலை புள்ளி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் நடைமுறையில் இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு பிணையமும் இல்லாமல் இந்த முத்ரா திட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சிசு, கிஷோர், தருண் என்ற மூன்று பிரிவுகளில் வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் இந்த முத்ரா திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர்களுக்கு கடன்களை வழங்கி வருகின்றன.

அதாவது வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் ,

  • சிஷு பிரிவின் கீழ் ரூ.50,000 வரையிலும்,
  • கிஷோர் பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலும்,
  • தருண் பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலும் கடனாக வழங்குகின்றன.

Credit Limit Of Mudra Loan Increased : 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு அதிகரிக்கப்பட்டது

தற்போது நிர்மலா சீதாராமன், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், முத்ரா திட்டத்துக்கான கடன் வரம்பு ஆனது ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் (Credit Limit Of Mudra Loan Increased) என 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தெரிவித்து உள்ளார். இந்த அறிவிப்பு ஆனது ஏற்கனவே முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வாங்கி அதை முறையாக திருப்பி செலுத்தியவர்களுக்கு மிகவும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் தொடங்க உள்ள தொழில் முனைவோர்களுக்கு இந்த அறிவிப்பானது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொழில் முனைவோர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply