CRI PUMPS அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் ரூ.35 கோடி முதலீடு செய்துள்ளது

CRI PUMPS நிறுவனம் விஸ்வரூப வளர்ச்சி :

திரவ மேலாண்மைகான தீர்வுகள் வழங்குவதில் முன்னணி நிறுவனமான CRI PUMPS நிறுவனம் ரூ.35 கோடி (5 மில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்து மகுடம் சூடியது. C.R.I ஆனது EEPC (Engineering Export Promotion Council) விருதை 14 முறையும், மின் சேமிப்புக்கான (NEC) விருதை 4 முறையும் பெற்றுள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள C.R.I நிறுவனம் ஆனது உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் திரவ மேலாண்மைக்கான தீர்வுகளை வழங்கும் நிறுவனங்களில் முதன்மை வகிக்கிறது. C.R.I ஆனது பம்புகள், மோட்டார்கள், வால்வுகள், IoT டிரைவ்ஸ் & கண்ட்ரோலர்கள், பைப்புகள், வயர்ஸ் & கேபிள் மற்றும் சோலார் சிஸ்டம்ஸ் ஆகியவற்றை அளிக்கிறது. C.R.I குழுமம் 9000 வகையான பொருட்கள் மற்றும் உலகிலேயே ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யக்கூடிய 100% Stainless Steel பம்புகளை (CRI PUMPS) தயாரிக்கிறது. உலகம் முழுவதும் C.R.I யின் தயாரிப்புகள் 120 நாடுகளில், 20,000 விற்பனையகங்கள் மற்றும் 1,500 சேவை மையங்கள் மூலம் விற்கப்படுகிறது.

C.R.I குழுமத்தின் வளர்ச்சி குறித்து துணைத் தலைவர் திரு.G.சௌந்தரராஜன் உரை :

உலகளவில் C.R.I குழுமம் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருகின்றது. C.R.I குழுமத்தின் துணைத் தலைவர் திரு.G.சௌந்தரராஜன் இவ்வளர்ச்சி குறித்து, C.R.I ஆனது அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கான தயாரிப்புகளை வடிவமைப்பதில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் தனக்கு முழுமையாக சொந்தமான கிளை நிறுவனத்தை நிறுவ சுமார் ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது.  அமெரிக்காவில் செயல்படும் சில பம்புகளை அசெம்பிளிங் செய்வதோடு நிலத்தடி நீர் பம்புகள், கழிவு நீர் பம்புகள், பிரஷர் பூஸ்டர் பம்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான பம்புகள் ஆகியவற்றை விநியோகிக்கிறது.

மேலும் அவர், C.R.I ஆனது விநியோகிஸ்தர்கள் மூலமாக அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நமது தயாரிப்புகளை அனுப்பி வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் C.R.I ஆனது 10 மில்லியன் அமெரிக்க டாலர் வியாபாரத்தை இந்நாடுகளிலிருந்து எதிர்பார்க்கிறது. இந்த கட்டத்தில் விற்பனைக்கு பின் வழங்கக் கூடிய சேவைகளை இந்தப் பிராந்தியத்தில் C.R.I டெலிவரி செய்வதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்கவும், புதிய தயாரிப்புகளை வழங்கவும் உறுதி செய்துள்ளது. இதனால் C.R.I ஆனது அந்தப் பிராந்தியத்தில் நல்ல வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. இந்தப் பகுதியில் C.R.I ஆனது சுரங்கத் தேவைகளுக்கான பிரத்தியேக பம்புகள், ரசாயன செயல்முறைக்கான பம்புகள், பம்பின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் IoT (Internet Of Things) உடன் கூடிய தொழிற்சாலைக்கான பம்புகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்தியாவிலேயே முதன் முறையாக முக்கியமாக லைட்னிங் அரெஸ்ட்டர் பொருத்தப்பட்ட மோட்டார்கள் C.R.I யின் ஆராய்ச்சி மையத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. C.R.I ஆனது அமெரிக்க சந்தைகளை குறித்து ஆராய்ச்சி செய்வதிலும், அமெரிக்கா மற்றும் கன்னடா சந்தைகளுக்கான அமெரிக்க சுகாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தரங்களுக்கான NSF & CSA போன்ற சான்றிதழ்களை பெறுவதிலும் கணிசமான முதலீட்டை செய்துள்ளது. C.R.I ஆனது நீர் நிரப்பப்பட்ட ரீவைண்டபிள் சப்மெர்சபிள் மோட்டார்களுக்கு NSF சான்றிதழ் பெற்ற உலகின் முதல் நிறுவனம் ஆகும். C.R.I  தயாரிப்புகள் 120க்கும் மேலான நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது C.R.I குழுமம், ஸ்பெயின், இத்தாலி, பிரேசில், துருக்கி, சீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் தனது மையங்களைக் (முழுவதும் சொந்தமான கிளை நிறுவனங்கள்) கொண்டுள்ளது.

C.R.I ஆனது 2018-19 நிதியாண்டில் ரூ.2100 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது. மேலும் வரும் 2024 நிதியாண்டில் ரூ.5000 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு வணிகத்தை விட C.R.I -ன் வெளிநாட்டு ஏற்றுமதி வணிகம் அதிக வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது உள்நாட்டைப் பொறுத்த வரை, C.R.I ஆனது கடந்த ஆண்டுகளில் பல்வேறு அரசு திட்டங்களுக்கும், டீலர்கள் மூலமாக 13 லட்சம் அதிக ஆற்றல் மிக்க மின் சேமிக்கும் ஸ்டார் மதிப்பீடு பம்புகளை பொறுத்தியுள்ளது. இதனால் C.R.I ஆனது 12,000 மில்லியன் யூனிட் மின்சாரத்தை நாட்டிற்காக சேமித்துள்ளது.

சமீபத்தில், C.R.I ஆனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை IoT வசதிக்கொண்ட PM மோட்டார்களை (Permanent Magnetic Motor) உருவாக்கி, அறிமுகம் செய்துள்ளது. அவை சோலார் பம்பிங் செய்வதற்கு பயன்படுத்தப்படுபவை ஆகும். C.R.I ஆனது கடற்படைக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பம்ப் செட்டுகளை வழங்கி உள்ளது. மேலும், C.R.I ஆனது பாதுகாப்புத் துறைக்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பம்ப் செட்டுகளை வடிவமைத்து வருகிறது. C.R.I ஆனது 21 தயாரிப்பு மையங்களை உலகெங்கிலும் கொண்டுள்ளது. பிரிட்டன் மற்றும் இத்தாலியில் C.R.I ஆனது நிறுவனங்களை கொண்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply