Criminals Tracing Through Breathalyzer And eDNA : மூச்சுக்காற்று, eDNA மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கலாம்

Criminals Tracing Through Breathalyzer And eDNA :

மூச்சுக்காற்று, eDNA (Environmental DNA) மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கலாம். இந்த டிஎன்ஏ (DNA) பரிசோதனைகள் பெருமளவில் கொலை, மற்றும் கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டறிய, ஆதாரங்கள் போதுமான அளவு இல்லாத நிலையில் உதவும். குற்றவாளிகள் ஆதாரம் இல்லாமல் குற்றம் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் கூட, குற்ற இடத்தில் அவர்கள்‌‌ பேசியது மற்றும் சுவாசித்ததால் படியும் டிஎன்ஏ மாதிரிகளைக் கொண்டு eDNA (Environmental DNA) மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க (Criminals Tracing Through Breathalyzer And eDNA) முடியும். ஜூரிக்கிலுள்ள ஸ்விஸ் ஃபெடரல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் ஆய்வாளர்கள் மூச்சு வெளியேறும் போது, அதிலிருந்து வெளிவரும் இராசயனப் பொருட்களை ஆய்வு செய்து  மூச்சுக்காற்றிலிருக்கும் பொருட்கள் ஒவ்வொரு தனி நபருக்கும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும் எனவும், அது காலத்துடன் மாறாது எனவும் கண்டறிந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஃபிளின்டர்ஸ் பல்கலைகழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் ஒரு தனிப்பட்ட உயிரினத்திலிருந்து நேரடியாக இல்லாமல், மண், கடல் நீர், பனி அல்லது காற்று போன்ற பல்வேறு சுற்றுச்சூழலில் படிந்திருக்கும் டிஎன்ஏ கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வு குறித்துப் பேசிய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவி எமிலி பிப்போ, “டிஎன்ஏ மாதிரிகளை சுற்றுச்சூழலிலிருந்து சேகரிக்கலாம்” என்பதை இந்த ஆய்வுகள் மூலம் ‌கண்டறிந்துள்ளோம்.

இந்த ஆய்வுக்காக குறிப்பாக அலுவலகம் மற்றும் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய ஏசியில் (Air Conditioner) சோதனைகளை  மேற்கொண்டோம். சோதனைகளில் AC-யின் வெளிப்புறத்தில் அந்த அறைக்கு சில நாள்களுக்கு முன்பு வந்து சென்றவர்களின்‌ DNA மாதிரிகளும், அதன் உட்புறத்தில் சமீபத்தில் வந்து சென்றவர்களின் DNA மாதிரிகளும் எங்களுக்கு கிடைத்தன. பொதுவாக மனிதர்களின் சருமத்தில் சுரக்கும் வியர்வைத் துளிகளும், பேசும்போதும் மற்றும் சுவாசிக்கும்போதும் வெளியேறும் உமிழ்நீர் துளிகளும் காற்றில் பறந்து அருகே உள்ள சுவர், கண்ணாடி, தரை போன்றவற்றில் ஒட்டிக்கொள்ளும். AC-யைப் பொருத்தவரை அறையிலிருக்கும் சூடான காற்றை உள்ளே இழுக்கும்போது இவை AC-யில் படிகிறது. இவற்றைச் சேகரிப்பதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண எளிதாக இருக்கும்.

ஆதாரம் இல்லாமல் குற்றம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் குற்றவாளிகளையும்‌ கூட, குற்ற இடத்தில் அவர்கள்‌‌ பேசியது மற்றும் சுவாசித்ததால் படியும் டிஎன்ஏ மாதிரிகளை எடுத்து, அவர்களைக் கண்டுபிடிக்க (Criminals Tracing Through Breathalyzer And eDNA) முடியும். இம்முறையில், சமீபத்தில் அந்த இடத்துக்கு வந்து சென்ற நபர்களின் டிஎன்ஏவை மட்டும்தான் சேகரிக்க முடியும். ஆனால் நீண்ட நாள்களுக்கு முன்பு வந்து சென்றவர்களின் டிஎன்ஏவை (DNA) சேகரிக்க முடியாது. அதேபோல, இதுபோல டிஎன்ஏவை வெளிப்புறங்களில் சேகரிக்க இயலாது என்று கூறியுள்ளார். இவ்வகையில், விளையாட்டுப் போட்டியில் பங்குபெறுபவர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியுள்ளர்களா என்று பார்க்கவோ அல்லது ஒரு நோயாளிக்கு எந்த அளவுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்பதை கணிக்கவோ மூச்சுகாற்று பரிசோதனை செய்தாலே போதும் எனும் நிலை ஏற்படக் கூடும். மூச்சுக்காற்றை பரிசோதனை செய்வதன் மூலம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடலியல் தன்மைக்கேற்ப, தனிப்பட்ட முறையில் மருத்துவ முறைகளை வடிவமைக்க முடியும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Latest Slideshows

Leave a Reply