Crude Oil Imports : இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிப்பு ஏற்படும்
Crude Oil Imports Will Get Affected In India :
பாரசீக வளைகுடா பகுதியில் ஈரான் – இஸ்ரேல் மோதலால் பதட்டம் மிகவும் அதிகரித்துள்ள சூழலில், கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஆனது ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை இறக்குமதி (Crude Oil Imports) செய்ய கூடுதல் செலவு செய்ய வேண்டி வரும் எனவும் கருதப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிப்பு ஏற்படும்.
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தால் இந்தியா பாதிக்கப்படும் :
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவிகிதத்தை இறக்குமதி (Crude Oil Imports) செய்கிறது. ஆகவே உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தால் இந்தியாவுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இஸ்ரேல் ஆனது சிரியா நாட்டில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ஈரான் ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பதட்டம் அதிகரித்தது மற்றும் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து உள்ளது. பிராண்ட் குரூட் விலை இந்த சம்பவத்துக்கு முன்பு ஒரு பீப்பாய் 85 டாலர் என்ற சராசரி விலையில் இருந்து வந்தது. சமீபத்தில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பொதுவாக இறக்குமதி செய்யும் பிரண்ட் குரூட் விலை ஒரு பீப்பாய்க்கு 90 டாலரை எட்டி உள்ளது. கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலரை எட்டும் அபாயம் உள்ளது.
இந்தியன் எரிபொருள் நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையை உண்டாக்கும் :
- இந்தியாவில் சென்ற மாதம் 14 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் ஆனது குறைக்கப்பட்டது. ஆனால், பதட்ட சூழல் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை படிப்படியாக அதிகரித்து வருவதால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஆனது ஏற்படும் என கருதப்படுகிறது.
- இஸ்ரேல் ஆனது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் விமானங்கள் மூலமாக நடத்தியுள்ள தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தனது நடவடிக்கை எடுக்கும் என கருதப்படுகிறது. இதனால் மோதல் மேலும் அதிகரித்து கச்சா எண்ணெய் அதிகம் உற்பத்தி செய்யப்படும் பாரசீக வளைகுடா பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளது எனவும் கருதப்படுகிறது.
- இவற்றால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் (Crude Oil Imports) அபாயம் உள்ளது. ஆகவே கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆனது இந்தியன் எரிபொருள் நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையை உண்டாக்கும்.
Latest Slideshows
-
Yoga Benefits : யோகா செய்வதால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!
-
International Film Festival 2025 : 23-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச 11-ல் தொடக்கம்..!
-
Madras High Court Recruitment : சென்னை உயர் நீதிமன்றத்தில் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?