CSIR Jobs : 444 அதிகாரி பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
CSIR Jobs : அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் Council Of Scientific And Industrial Research (CSIR) ஒருங்கிணைந்த நிர்வாக சேவைகள் தேர்வுக்கான (COMBINED ADMINISTRATIVE SERVICES EXAMINATION – 2023 (CASE – 2023)) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வு மூலம் முதுநிலை அலுவலர் மற்றும் உதவி பிரிவு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
CSIR Jobs - Section Officer :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : Section Officer பணியிடங்களுக்கு 76 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் (UG) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age) : இந்த Section Officer பணியிடங்களுக்கு 33 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary Process) : இந்த Section Officer பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.44,900 – ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CSIR Jobs - Assistant Section Officer :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : Assistant Section Officer பணியிடங்களுக்கு 368 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த Assistant Section Officer பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் (UG) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age) : Assistant Section Officer பணியிடங்களுக்கு பணியிடங்களுக்கு 33 வயதிற்குள் இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary Process) : Assistant Section Officer பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.40,900 – ரூ.1,32,400 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CSIR Jobs Process :
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த Section Officer & Assistant Section Officer பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் எழுத்துத் தேர்வில் ஆங்கிலம் மற்றும் பொது அறிவு பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இந்த தேர்விற்கான கால அளவானது 2 மணி நேரம் ஆகும்.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://csir.cbtexamportal.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த Section Officer & Assistant Section Officer பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500. மேலும் பெண்கள் மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள் எதற்கும் விண்ணப்பிக்கும்போது பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
- விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.01.2024 ஆகும்.
- மேலும் விவரங்களுக்கு : https://www.csir.res.in/sites/default/files/2023-12/Detail%20%20Advt.%20-%2008.12.2023.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
IMS India Masters Team Champion : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி
-
India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
-
Aval Manam Book Review : அவள் மனம் புத்தக விமர்சனம்
-
China Launches Quantum Computer : கூகுள் சூப்பர் கணினியைவிட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம் கணினியை சீனா அறிமுகம் செய்துள்ளது
-
Sunita Williams Returns Earth On March 19th : சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 19-ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்புகிறார்
-
Interesting Facts About Common Ostrich : நெருப்புக்கோழி பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
CAPF Notification 2025 : மத்திய பாதுகாப்பு படையில் 357 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Good Bad Ugly Story : குட் பேட் அக்லி படத்தின் கதை இதுதானா?
-
எளிமையான மற்றும் பாதுகாப்பான BuzzBGone Mosquito Controller
-
First Hydrogen Train In India : ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் வழித்தடத்தில் முதல் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படவுள்ளது