CSK Next Captain: ருத்ராஜிக்கு அடித்த அதிர்ஷ்டம்!.. சென்னை அணியில் நடக்கப் போகும் மாற்றம்!..

ஆசிய ஜூனியர் போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு கேப்டனாக ருத்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இளம் வீரர்களின் திறமையை நிரூபிக்கும் வகையில் ஆசிய அணிகளுக்குள் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இது சைனாவில் நடத்தப்பட்டு வருகிறது.

கேப்டன் ருத்ராஜ் :

இந்திய அணிக்காக வெறும் பத்து போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ள ருத்ராஜ் அவர்களுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் அடுத்த கேப்டன் பதவிக்கு யாரெல்லாம் இருப்பார்கள் என்று பார்த்தால், ஐயர், பண்ட், கில் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே வரிசையில் இருக்கும். இவர்கள் இருக்கும் போது இவர்களின் ஜூனியர் ஆன ருத்ராஜ் அவர்களுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று அடுத்த சென்னை அணிக்கும் கேப்டன் பதவி காலியாக உள்ளது.

மகேந்திர சிங் தோனி எப்படியும் அடுத்த சீசன் உடன் ஓய்வு பெற்று விடுவார். இதனால் அந்த அணிக்கு தோனிக்குப் பிறகு யார் அணியை சிறப்பாக வழிநடத்த போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ருத்ராஜை இந்திய அணியின் கேப்டனாக நியமித்ததன் மூலம் சென்னை அணையிலும் அவரே இருப்பார் என்ற குழப்பம் உருவாகியுள்ளது.

தோனிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகளில் ஜடேஜா தான் சென்னை அணியை வழிநடத்த அதிக வாய்ப்புகள் இருந்தன. கடந்த சீசனில் கூட ஜடேஜா பொறுப்பாக விளையாடினார். இதனால் அவர் தான் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ருத்ராஜ் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதன் மூலம் சென்னை அணி கேப்டனாக யாரை தேர்வு செய்யும் என்ற குழப்பம் வந்துள்ளது.

குறிப்பாக இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அணியை அனுபவம் இல்லாத ஜடேஜா வழிநடத்திய போது பெரும் தோல்விகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ருத்ராஜ் உள்ளூர் போட்டிகளில் மகராஷ்டிரா அணிக்கும் புனே அணிக்கும் கேப்டனாக வழிநடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ருத்ராஜ் தோனியை போன்றே கிரவுண்டில் அதிகமாக பதற்றத்தை வெளிப்படுத்த மாட்டார். இது அவருக்கு கேப்டனாக வாய்ப்பு பெற கூடுதல் பலமாக உள்ளது. இருந்தாலும் அவருக்கு அனுபவம் அவ்வளவாக இல்லாததால் சென்னை அணியை எப்படி வழிநடத்தப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest Slideshows

Leave a Reply