You are currently viewing CSK Players Acted in GOAT Movie: Vijay in கோட் படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்
CSK Players Acted in GOAT Movie - Platform Tamil

CSK Players Acted in GOAT Movie: Vijay in கோட் படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்

CSK Players Acted in GOAT Movie: Vijay in கோட் படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்

நடிகர் விஜய் நடிக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் விஜய் லியோ படத்திற்கு பிறகு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். பிகில் படத்திற்கு பிறகு இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி அமரன், வைபவ், விடிவி கணேஷ் மற்றும் பலர் இடம் பெற்றுள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஏப்ரல் 14 ஆம் தேதி, தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் விசில் போடு பாடல் வெளியிடப்பட்டது. விஜய் பாடிய இந்த பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

CSK Players Acted in GOAT Movie:

ரஷ்யாவில் கோட் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்படத்தில் AI தொழில்நுட்பத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த அப்டேட் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இந்நிலையில்தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜ்மல் ஒரு முக்கிய விஷயத்தை பேசியுள்ளார். அதில், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, “இப்போது எதுவும் சொல்ல முடியாது. ஏஜிஎஸ் நிறுவனமும், வெங்கட் பிரபுவும் படம் பற்றிய சுவாரஸ்ய விவரங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார். அப்படியென்றால் அந்த சென்னை அணி வீரர்கள் யார்? யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply

Leave a Reply