Custard Apple Benefits in Tamil: சீத்தாப்பழம் நன்மைகள் | சீத்தாப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவ குணங்கள்

Custard Apple Benefits in Tamil: பழங்களில் தனிப்பட்ட சுவையும் மணமும் கொண்டவை சீத்தாப்பழமாகும். இப்பழத்தின் இலை, தோல், விதை, மரப்பட்டை என அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. சீத்தாப்பழத்தில் சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகிய இரண்டும் நிறைந்து இருப்பதால் உடலுக்கு நல்ல ஆற்றலை கொடுக்கிறது. இந்நிலையில் சீத்தாப்பழம் தரும் நன்மைகளை தற்போது காணலாம்.

சீத்தாப்பழம் நன்மைகள் (Custard Apple Benefits in Tamil)

சீத்தாப்பழத்தில் வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் C, வைட்டமின் B- காம்ப்ள்க்ஸ், பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், கொழுப்புச்சத்து, தாது பொருட்கள், புரதம் ஆகியவை சீத்தாப்பழத்தில் நிறைந்து காணப்படுகிறது. சீத்தாப்பழத்தில் இருக்கும் தாது பொருட்கள் நமது உடலில் இருக்கும் தசைகள் மற்றும் எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த

Custard Apple Benefits in Tamil: சீத்தாப்பழத்தில் அதிக அளவும் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இரத்த நலன்களின் விரிவாக்கத்தை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் இரத்த அழுத்தம் சீராகி இதய நோய் ஏற்படாமல் காக்கிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறை இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சீத்தாப்பழத்தை தினமும் எடுத்துக்கொள்ளலாம்.

உடல் எடை அதிகரிக்க

Custard Apple Benefits in Tamil: ஆரோக்கியமான உடல் எடை அதிகரிக்க வேண்டுமென நினைப்பவர்கள் சீத்தாப்பழத்தை தேர்வு செய்யலாம். இதில் கார்போஹைட்ரேட்டுகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதங்கள் ஆகியவை நிரம்பியுள்ளது. சீத்தாப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வருவதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடை அதிகரிக்க செய்யும்.

செரிமானத்திற்கு உதவுகிறது

Custard Apple Benefits in Tamil: ஒரு கப் அளவுள்ள சீத்தாப்பழத்தில் 5 கிராம் அளவுள்ள நார்ச்சத்து உள்ளது. சீத்தாப்பழத்தில் தாமிரச்சத்தும் நார்ச்சத்தும் சீராக இருப்பதால் செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. நமது உடலில் குடல் இயக்கத்தை சீரான முறையில் செயல்படுத்தி குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாகிறது. சீத்தாப்பழம் ஜீரண சக்தியை அதிகரிப்பதால் தலைச்சுற்றல், வாந்தி, பித்தம், பேதி ஆகிவற்றை குணப்படுத்தும்.

ஆஸ்துமா ஏற்படாமல் தடுக்க

Custard Apple Benefits in Tamil: சீத்தாப்பழமானது வைட்டமின் B6 – ஐ கொண்டுள்ளது. இது மூச்சுக்குழல் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது. ஆஸ்துமாவை தடுக்க உதவுகிறது. மேலும் நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. சீத்தாப்பழமானது காய்ச்சல் மற்றும் குளிரை குணப்படுத்தக்கூடியது.

எலும்பு பலமடைய

Custard Apple Benefits in Tamil: சீத்தாப்பழம் மனித உடலுக்கு நன்மை தரக்கூடியவை ஆகும். சீத்தாப்பழத்தில் அதிகளவு கால்சியம் இருப்பதால் பற்கள், எலும்புகளை பலப்படுத்துகிறது. தசைப்பிடிப்பு உள்ளவர்கள் சீத்தாப்பழத்தை எடுத்துக்கொள்ளலாம் இதன் மூலம் தசைகள் வலிமையடையும். மேலும் இது பெண்களுக்கு ஏற்ற கனி எனவும் சொல்லலாம். இது கருவுறுதலை மேம்படுத்துகிறது, சோர்வு தன்மையை குறைகிறது. மூளை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? அப்படி இருந்தால் தினமும் சீத்தாப்பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Latest Slideshows

Leave a Reply