Cyclone Michaung Effect : தண்ணீர் வடியாமல் காட்சி அளிக்கும் சென்னை நகரம்

Cyclone Michaung Effect : வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை தீராமல் கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையால் சென்னையில் வரலாறு காணாத மழை பெய்தது.

மிக்ஜாம் புயல் :

இந்த கனமழையால் சென்னை முழுவதும் அண்ணாசாலை, அண்ணாநகர், ஆலந்தூர், வடபழனி, வளசரவாக்கம், விருகம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், கோயம்பேடு, கிண்டி, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி என சென்னை முழுவதும் தண்ணீர் ஆறாக சாலைகளில் (Cyclone Michaung Effect) பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் தொடர் மழை பெய்து வந்ததால் சாலைகளில் தேங்கிய நீரை உடனடியாக அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.

பலத்த காற்றால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்நிலையில் நேற்று மாலை முதல் மாநகராட்சி ஊழியர்கள் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியிலும், விழுந்த மரங்களை அகற்றும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் ஏற்கனவே 16,000 பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதால், அவர்களின் திறமையான பணியால் பல இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது. குறிப்பாக அண்ணாசாலையில் நேற்று வெள்ளப்பெருக்கு போல் காட்சியளித்த தண்ணீர் இன்று முழுமையாக வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. மேலும் ஆலந்தூர், கிண்டி, ராயப்பேட்டை, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் என பல இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது.

Cyclone Michaung Effect - வற்றாத மழை நீர் :

மறுபுறம், வழக்கமாக கனமழையால் பாதிக்கப்படும் வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் தண்ணீர் (Cyclone Michaung Effect) வடியவில்லை. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடசென்னையில் உள்ள மிண்ட், கொடுங்கையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியவில்லை. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் உள்ள முக்கிய சுரங்கப்பாதைகளில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மேலும் சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான அரும்பாக்கத்தில் இன்னும் தண்ணீர் வடியவில்லை என தெரியவந்துள்ளது. இதனால் வடபழனியில் இருந்து அரும்பாக்கம் வழியாக கோயம்பேடு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். அதிக கனமழை பெய்ததால் சென்னை விமான நிலையம் இன்று காலை வரை மூடப்பட்டது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் இருந்து வெளியேறும் நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply