சென்னையை தாக்க வரும் Cyclone Michaung

Cyclone Michaung :

சென்னை ஆனது கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத அதிக கனமழைக்கு பிறகு தற்போது 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அதிக கனமழையை எதிர்கொள்ள தயாராகி வருகிறது சென்னையை மிக்ஜாம் (Cyclone Michaung) புயலானது பலமாக தாக்குமா?  மற்றும்  சென்னை மிக்ஜாம் (Cyclone Michaung) புயலின் கோரத்தாண்டவத்தில் இருந்து எப்படி தப்பிக்கப்போகிறது? என்பது பெரிய எதிர்பார்ப்பை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில்  உள்ள பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை ஆனது தீவிரமடைந்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். டிசம்பர் 2ஆம் தேதி அந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆனது தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என்று அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது.

மிக்ஜாம் புயல் :  சென்னைக்கு 800 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயலுக்கு மிக்ஜாம் புயல் (Cyclone Michaung) என்று பெயரிடப்பட்டுள்ளது. வரும் 3ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம்  மிக்ஜாம் புயலாக உருமாறும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த மிக்ஜாம் புயல் ஆனது மெதுவாக நகர்ந்து  வருகின்ற 4ஆம் தேதி சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆனது கணித்து அறிவித்துள்ளது. இந்த புயல் ஆனது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி வரும் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தை நோக்கி இந்தப் புயல் வரும்போது கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இந்த மிக்ஜாம் புயல் (Cyclone Michaung) ஆனது தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிர புயலாகவோ மாற வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply