D50 Dhanush Look: இணையத்தில் வைரலாகி வரும் D50 படத்தின் தனுஷ் புகைப்படம்

D50 படத்தை தனுஷ் இயக்கி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு D50 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் D50 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் தனுஷின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

D50 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தனுஷ்

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர், Tere Ishk Mein ஆகிய படங்களின் மாறி மாறி நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தனுஷ் தனது 50வது படத்தை தொடங்கியுள்ளார்.

தனுஷின் 50வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த வாரம் டி50 படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளதாக அறிவித்த படக்குழு, மிரட்டலான போஸ்டரையும் ரிலீஸ் செய்திருந்தது. நடிகர் தனுஷ் இயக்கிய முதல் பவர் பாண்டி படத்தில் தனுஷ் நடிக்கவே இல்லை. ஆனால் டி 50 இல், அவரே ஹீரோவாக நடிக்கிறார். மேலும் விஷ்ணு விஷால், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, துஷாரா பாலா முரளி, சந்தீப் கிஷன் என மாஸான கூட்டணியை இணைத்துள்ளார். முக்கியமாக இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் D50 படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. புதிய தகவலின்படி தனுஷின் அண்ணன் செல்வராகவனும் இப்படத்தில் நடிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. தனுஷுடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. எனவே தற்போது வெளியாகியுள்ள தகவல்களில் சில மாற்றங்கள் இருக்கலாம் எனத் தெரிகிறது.

வடசென்னையை பின்னணியாகக் கொண்டு கேங்ஸ்டர் ஜானரில் D50 படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும், படத்தின் டைட்டில் ‘ராயன்’ எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் திருப்பதி சென்ற தனுஷ், சாமி தரிசனம் செய்துவிட்டு மொட்டை தலையுடன் சென்னை திரும்பினார். அதே மொட்டைத் தலையுடன் டி 50 படத்திலும் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. தற்போது அது உண்மை என உறுதி செய்யப்பட்டுள்ளது. D50 படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் பங்கேற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்புக்காக காரில் வருவதாக தெரிகிறது. வெள்ளை சட்டை, மொட்டை என ரியல் கேங்ஸ்டர் தோற்றத்தில் தனுஷ் இருக்கும் இந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply