D50 First Look : வெளியானது தனுஷின் D50 "ராயன்" ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் தனுஷின் 50வது படமான D50 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (D50 First Look) வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு “ராயன்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மாஸ் இயக்குனர்களை வைத்து சிறப்பான படங்களை கொடுத்து வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார். இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கினார் தனுஷ். அதில் D50 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க இளைஞர்களை வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்குகிறார் தனுஷ். இதற்கிடையில், அவர் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் D51 திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், D50 படத்தின் தலைப்பு இன்னும் வெளியாகாத நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (D50 First Look) மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுஷ் கேங்ஸ்டராக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

D50 First Look :

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் D50 படம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் முடிவடைந்தது. தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு முன் தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், ரேவதி மற்றும் பலர் நடித்த ‘பவர் பாண்டி’ படம் பெரும் வெற்றி பெற்றது. ஒரு படத்தை இயக்குவதற்கு முன் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் உணர்கிறேன் என்று கூறிய தனுஷ், சில வழிமுறைகளை வழங்கினார். தனுஷ் தற்போது இயக்குவதில் தீவிரம் காட்டி இயக்கி முடித்துள்ள படம் D50. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (D50 First Look) தற்போது வெளியாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில் தனுஷ் மொட்டைத் தலையுடன் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். இதில் அவர் சமையல் கலைஞரின் உடையை அணிந்துள்ளார். ஆனால் இந்த போஸ்டரில் ரத்தக் கறைகள் காணப்படுவதுடன் காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் பின்புறத்தில் காணப்படுகின்றனர். இப்படம் கேங்ஸ்டர் படமாக உருவாகும் என்று முன்பே அறிவிக்கப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (D50 First Look) வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷுடன் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷன் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும் ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். தனது முதல் படத்தை ஒரு ஃபீல் குட் படமாக இயக்கிய தனுஷ், இந்தப் படத்தில் கேங்ஸ்டர் கதையை கையாள்வது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply