D50 Updates : தனுஷ் படத்தில் வில்லனாக களமிறங்கும் இசைமைப்பாளர் தேவா

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இந்த படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் தனது அடுத்த படமான டி50 படத்தை இயக்கி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தில் பிரபல இசைமைப்பாளர் தேவா வில்லனாக களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாத்தி திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாஸ் காட்டியது. வாத்தி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியானது. இந்தப் படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியான நிலையில், அங்கும் அதிக ரசிகர்களைக் கவர்ந்து ஹிட் ஆனது. இந்தப் படத்தின் மூலம் தெலுங்கிலும் தான் மாஸ் என்பதை தனுஷ் நிரூபித்துள்ளார். தொடர்ந்து பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட்டிலும் தன்னை சூப்பர் என்று நிருபித்துள்ளார். இந்தப் படத்தை அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் சர்வதேச அளவில் டிசம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என முன்னதாக கூறப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தாமதம் ஆனதால், இந்த படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்டக் காலம் தான் இந்தப் படத்தின் கதைக்களம். இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் உள்ளிட்ட அடுத்த அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

D50 Updates : இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து தற்போது தனுஷ் அவரே இயக்கி நடித்து வரும் டி50 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா முரளி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் டி50 வடசென்னை கதைக்களத்தில் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் மிகவும் விறுவிறுப்பாக நடத்தி வரும் தனுஷ், அக்டோபர் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்ததாக சேகர் கம்முலா இயக்கத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.

D50 Updates - தனுஷுக்கு வில்லனாகும் இசைமைப்பாளர் தேவா :

90-களின் காலகட்டத்தை இசையால் அதிர வைத்தவர் தேவா ஆவர். தமிழ் சினிமா உலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் தேவா. இவர் இசையமைப்பாளர் மட்டுமின்றி பாடகரும் கூட. வேலூர் மாவட்டம் மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 20 வருடங்களாக திரையுலகில் பயணித்து வருகிறார். இசையமைப்பாளர் தேவா என்றாலே நினைவுக்கு வருவது கானா தான். இவருடைய கானா பாடல்கள் எல்லா இடங்களிலும் பிரபலமானவை. இவர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசைமைத்துள்ளார்.

D50 Updates : இந்த நிலையில் டி50 படத்தில் பிரபல இசைமைப்பாளர் தேவாவை வில்லனாக தனுஷ் கமிட் செய்துள்ளதாக தேவா தனது சமீபத்திய பேட்டியில் உறுதி செய்துள்ளார். மேலும், தனுஷ் தன்னை தொலைபேசியில் அழைத்து இந்த கேரக்டரில் நடிக்கச் சொன்னதாகவும், தன்னை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பியபோது, ​​தன்னுடைய வட சென்னை ஸ்லாங் நன்றாக இருக்கும் என்றும், படத்தில் வில்லன் கேரக்டருக்கு இது தேவை என்றும் தனுஷ் கூறியதாகவும் தேவா கூறினார். ஆனால், தனுஷிடம் டயலாக்குகளை அதிகம் மனப்பாடம் செய்ய முடியாது என்றும், அதனால் அதிக டேக்குகளை வாங்குவேன் என்றும், இதனால் சக நடிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறியதற்கு, அதலாம் பரவாயில்லை சார் என்று தனுஷ் கூறியதாக தேவா தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தற்போது தமிழ் ரசிகர்களுக்கு அடுத்த சூப்பர் வில்லன் கிடைத்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply