D51 Movie Title : தனுஷ் நடிக்கும் 51வது படத்தின் தலைப்பு இன்று வெளியாகிறது

D51 Movie Title :

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் 51-வது படத்தின் தலைப்பு இன்று வெளியாக இருப்பதாக (D51 Movie Title) படக்குழு அறிவித்துள்ளது. தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கேப்டன் மில்லர். ஆனால் அந்த படம் அவர் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. இந்நிலையில், தனது 50வது படமான ‘ராயன்’ படத்தை இயக்கியுள்ள அவர், அடுத்ததாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ் இன்று வெளியாக இருப்பதாக படக்குழு (D51 Movie Title) தகவல் வெளியிட்டுள்ளது. துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான தனுஷ், பல விமர்சனங்களை தாண்டி தற்போது சிறந்த நடிகராக வலம் வருகிறார். அவர் தமிழ் சினிமாவில் என்றும் நிலைக்க மாட்டார் என்று பலரும் கூறினர். ஆனால் தனுஷ் அவர்களின் கணிப்புகளை மீறி கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்றுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனுஷ் 50 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படத்திற்கு ‘ராயன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில், கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் தனுஷ் நிற்கிறார். அவருக்குப் பின்னால் காளிதாஸ் ஜெயராமும் சந்தீப் கிஷனும் ஒரு பாஸ்ட்  புட் ஸ்டால் அமைப்பிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன. இதற்கிடையில், தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா மற்றும் பலர் நடிக்கின்றனர். தனுஷ் ஏற்கனவே தெலுங்கு இயக்குனர் இயக்கிய வாத்தி படத்தில் நடித்துள்ளார். ஆனால் படம் தோல்வியடைந்தது. அதனால் இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் தனது மார்க்கெட்டை பலப்படுத்திக் கொள்ளலாம் என்று தனுஷ் கணக்கிட்டுள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ் வெளியீடு குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி க்ளிம்ப்ஸ் மார்ச் 8ம் தேதி வெளியாகும் என்றும், விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது. முன்னதாக கடந்த மாதம் தனுஷ் 51 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என சேகர் கம்முல்லா கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் தலைப்பு, கிளிம்ப்ஸ் வீடியோ இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு (D51 Movie Title) வெளியாகும் என்று இங்கிலாந்தில் படத்தை விநியோகம் செய்யும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply