DA Hike For Government Employees : தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியானது 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான உதவித்தொகையை 3 சதவீதம் உயர்த்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
DA Hike For Government Employees
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 50 சதவீதத்தில் இருந்த அகவிலைப்படியை உயர்த்தி 53 சதவீதமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. நாட்டுக்கு வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, அவர்களின் நலன் காக்க இந்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஊதிய உயர்வு கிடைக்கும். இதில், ஜூலை மாதத்தில் இரண்டாவது மானிய விலையை உயர்த்தி வழங்க வேண்டும். பொதுவாக தீபாவளி பண்டிகையை மனதில் கொண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் அறிவிக்கப்படும். அத்தகைய கால அவகாசம் தாழ்த்தி அறிவிக்கப்படும் போது, ஜூலை மாதம் முதல் அறிவிப்பு வெளியான மாதம் வரை அரசு ஊழியர்களுக்கு முன் தேதியிட்ட அகவிலைப்படி (DA Hike For Government Employees) வழங்கப்படும். இதன் மூலம் அரசு ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.
அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி
இந்த அகவிலைப்படி அதிகரிப்பால் (DA Hike For Government Employees) சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1931 கோடி கூடுதல் செலவு ஏற்படும். ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் நலனுக்காக கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என குறிப்படப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Latest Slideshows
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?
-
Nothing Phone 3a Lite Price : சிறந்த அம்சங்களுடன் குறைந்த விலையில் Nothing Phone
-
Blind Women's T20 World Cup: உலகின் முதல் சாம்பியனாக வரலாறு படைத்தது இந்தியா!
-
IQOO 15 Price In India : iQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?