David Warner Post Goes Viral: புஷ்பாவாக மாறிய டேவிட் வார்னர்

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “புஷ்பா 2” ஆகும்.

2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. புஷ்பாவின் முதல் பாகம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுனின் ஸ்டைல் ​​விடியோவாகவும் மற்றும் ரீல்ஸ்களாகவும் இணையத்தில் ட்ரெண்டாகி வந்தது. இந்த படத்தில் வரும் ‘ஓ சொல்ரியா மாமா’ எல்லா பட்டிதொட்டி எங்கும் இந்த பாடல் செம வைரலானது. இந்த ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை சமந்தா கவர்ச்சியாக நடனமாடினார். இந்த படலானது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் ஆனதை அடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு புஷ்பா 2 திரைப்படத்தின் பக்கம் திரும்பியது. புஷ்பா 2 தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் புஷ்பாவாக மாறிய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது டேவிட் வார்னர் “புஷ்பா 2” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் உள்ள அல்லு அர்ஜுன் புகைப்படத்திற்கு பதிலாக வார்னர் தனது புகைப்படத்தை மாற்றி பதிவிட்டுள்ளார். இதை அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். டேவிட் வார்னர் தொடர்ந்து இதுபோன்ற பல புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply