DCDRC Recruitment 2023: குறைந்தபட்ச கல்வித்தகுதியில் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அரசு வேலைவாய்ப்பு

திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரம்: 1 அலுவலக உதவியாளர்.

இனசுழற்சி அடிப்படையில் இந்த வேலைக்கு அனைத்து வகுப்பினரும் முன்னுரிமை உள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி: இந்த பதிவுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 18 வயதில் இருந்து 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணிக்கான ஊதியம்: மாத வருமானமாக ரூ. 15,700 ரூபாய் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 21.6.2023 அன்று மாலை 5.30 மணிக்குள் ரூ.50/-க்கான சுயமுகவரி எழுதப்பட்ட உறையுடன் பதிவுத் தபாலில் அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் அரசு கொடுக்கும் அதிகாரப்பூர்வ விதிகளில் படி பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி

தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், திருவாரூர் – 610 001 , குமரன்கோவில் தெரு, எண்: 52. மேலும் நேர்காணல் மூலம் காலிப்பணியிடம் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: 21/06/2023.

Latest Slideshows

Leave a Reply