DD Returns Review : பேய் கதையில் மீண்டும் வென்ற சந்தானம் | டிடி ரிட்டர்ன்ஸ் விமர்சனம்...

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், மொட்டை ராஜேந்திரன், சுரபி, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி உள்ளது. இசைமைப்பாளர் ரோஹித் ஆபிரகாம் இப்படத்திற்கு இசைமைத்துள்ளார். ஏற்கனவே சந்தானம் நடித்து வெளியான தில்லுக்கு துட்டு படத்தின் 3 வது பாகமாகும். தற்போது டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் விமர்சனத்தை தற்போது காணலாம்.

DD Returns Review - கதை சுருக்கம் :

முன்னொரு காலத்தில் பாண்டிச்சேரியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பங்களா இருந்தது. அங்கே சூதாட்டத்தை தொழிலாக செய்து வந்தனர். அந்த போட்டியில் தோற்றவர்களை கொன்று குவித்த குடும்பம், கிராம மக்களால் எரித்துக் கொல்லப்பட்டனர். இதற்கிடையில் தற்போது பாண்டிச்சேரி பெரிய மனிதர் பெப்சி விஜயனின் இருந்த பணம், நகை ஆகிவற்றை பிபின், முனிஷ்காந்த் குழுவினர் கொள்ளையடித்து வருகின்றனர். இந்த பக்கம் பிபின் போதைப்பொருள் தொழிலில் சம்பாதிக்கும் பணத்தை திருட மொட்டை ராஜேந்திரன் குழு திருட முயல்கிறது. மறுபுறம் சுரபியை சிக்கலில் இருந்து காப்பாற்ற சந்தானத்திற்கு 25 லட்சம் தேவைப்படுகிறது. இந்நிலையில் பிபின் குழுவினரின் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளை மொட்டை ராஜேந்திரன் குழுவினர் கைப்பற்றியுள்ளனர். அடுத்த நிமிடம் அது சந்தானத்திடம் வசமாகிறது. அவரும் சுரபியையும் காப்பாற்றுகிறார்.

இதனிடையே சந்தானத்தின் நண்பர்கள் மாறனும், சைதை சேதுவும் போலீசுக்கு பயந்து மீதமுள்ள பணம் மற்றும் நகைகளை பங்களாவுக்கு எடுத்துச் செல்கிறார்கள். பேராசை பிடித்தவர்கள் பேய்களாக அலையும் அந்த பங்களாவில் விளையாடி ஜெயித்தால் காசு, இல்லாவிட்டால் மரணம் என நிலை இருக்கிறது. இதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதை சந்தானம் முதல் மொட்டை ராஜேந்திரன் வரை உற்சாகமாக சொல்லியிருக்கிறார்கள்.

நடிகர்களின் நடிப்பு :

DD Returns படமானது ரசிகர்களை சிரிக்க வைப்பதே படத்தின் நோக்கம் என்பதால் அதில் சந்தானம் அசால்ட்டாக வெற்றி பெற்றுள்ளார். மாறன், சைதை சேது, முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பெப்சி விஜயன், பிபின் மற்றும் பலர் நகைச்சுவை காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளனர். வில்லன் நடிகரான பிரதீப் ராவத் வித்தியாசமான பேயாக வசீகரிக்கிறார். சுரபிக்கு படத்தில் அதிக வேலை இல்லாவிட்டாலும், கதையின் ஓட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

பேய் படத்தில் லாஜிக் பார்க்கக்கூடாது என்ற விதி உள்ளது. அதை மறந்துவிட்டு படம் பார்த்தால் சிரிப்புதான் வரும். ஆங்காங்கே டைமிங் டயலாக்குகளும் கைதட்டல்களை அள்ளுகின்றன. அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை கேலிக்கூத்து செய்கிறார்கள். பேயிடம் சென்டிமென்ட் பாடல், பக்திப் பாடல், யூடியூப் விளம்பரங்களைக் நக்கலடிப்பது என காட்சிக்கு காட்சி நம்மை ரசிக்க வைக்கிறார்கள்.

பயமுறுத்தும் பேய் என சென்று பார்த்தால் பெரிய அளவில் இல்லை என்றாலும் நகைச்சுவைக் காட்சிகளுக்கு இங்கு நன்றாக இருக்கிறது. “டகேஷியின் கோட்டை” என்பது 90ஸ் கிட்ஸின் பேவரைட் நிகழ்ச்சியாகும் , “Takeshi’s Castle” நிகழ்ச்சியிலான விளையாட்டு உள்ளிட்டவை கவர்கிறது. படத்திற்கு பாடல்கள் தேவையில்லை. பின்னணி இசை நன்றாக இசையமைக்கப்பட்டுள்ளது. ஆகமொத்தம் பேய் கான்செப்ட் மூலம் சந்தானம் மீண்டும் ஒரு சூப்பரான வெற்றியை பதிவு செய்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply