De Villiers Praised Jaiswal: ஐ.பி.எல் தொடரிலேயே நிரூபித்து விட்டார்...

இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் பற்றி மனம் திறந்தார் தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ். அவரது அபார திறமையை கண்டு வியந்துள்ளதாகவும் கூறியுள்ளார் டிவில்லியர்ஸ்.

இளம் வீரர் ஜெய்ஸ்வால் :

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி அறிமுகப் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்ற இளம் வீரர் ஜெய்ஸ்வால். இவர் கடந்த ஐபிஎல் மூலம் உலகத்தை திரும்பி பார்க்க வைத்தார். அவரை ஐபிஎல் போட்டிகளிலேயே நிறைய ஜாம்பவான்கள் வெகுவாக பாராட்டி வந்தனர். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக ஜெய்ஸ்வாலை புகழ்ந்துள்ளார் டிவில்லியர்ஸ். அந்தப் போட்டியில் டிவில்லியர்ஸ் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் எப்போதும் தனியாக தெரிகிறார். அவர் ஒரு சிறந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஓப்பனிங்கிலேயே அதிரடியாக விளையாடுவது சாதாரணமான விஷயம் கிடையாது. அவரிடம் ஏதோ ஒரு திறமை வித்தியாசமாக இருக்கிறது. ஐபிஎல் தொடரிலேயே அவர் பலமுறை நிரூபித்துள்ளார். அவரை முதன்முறை பார்த்த பொழுதே அவரது திறமையை அடையாளம் கண்டுவிட்டேன்.

அவர் பேட்டிங் செய்யும்போது அவருக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. அவ்வளவு எளிதாக ஒவ்வொரு பந்தையும் எதிர் கொள்வதுடன் நேர்த்தியாகவும் செயல்படுகிறார். இவர் இடது கை பேட்ஸ்மேன் மற்றும் மிகவும் உயரமான பிளேயர் ஆகவும் இருப்பதால் வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது எளிதான ஒன்றாகும். சுழல் பந்துவீச்சிலும் அவர் சிறப்பாக எதிர் கொள்கிறார். அவர் எந்த ஷார்ட் விளையாடப் போகிறார் என தெளிவாக இருக்கிறார். அதனாலே தான் அவர் இவ்வளவு சிறப்பாக அறிமுகம் போட்டியிலேயே ஆட முடிகிறது.

தனி இடத்தை பிடிப்பார் :

இவர் கண்டிப்பாக இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு தனி இடத்தை பிடிப்பார். அதுமட்டுமல்லாமல் ஒரு முக்கிய பேட்ஸ்மனாக வரும் காலங்களில் நிச்சயமாக அவர் இருப்பார். அதே போன்று அஸ்வின் அவர்களும் வியக்கத்தக்க செயல்பாட்டை அணிக்கு அளித்து வருகிறார். ஒரு தொடர் மட்டுமல்லாமல் அவர் எல்லா தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். 

அவர் இடது கை பேட்ஸ்மேன் மட்டுமல்லாமல் அனைவருக்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுகிறார். நிச்சயமாக அவர் கிரிக்கெட்டில் ஒரு GOAT தான் என்று டிவில்லியர்ஸ் ஜெய்ஸ்வால் பற்றியும் அஸ்வினை பற்றியும் புகழ்ந்துள்ளார்

Latest Slideshows

Leave a Reply