Dear Exes First Look : டியர் எக்ஸஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகை நித்யா மேனனின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் (Dear Exes First Look) மற்றும் டைட்டில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. நேற்று நித்யா மேனனின் பிறந்தநாளில் அவர் நடிக்கும் டியர் எக்ஸஸ் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகை நித்யா மேனன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என பல்வேறு மொழி படங்களில் நடித்தவர் நித்யா மேனன். நட்சத்திர அந்தஸ்துக்காக அல்லாமல், மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை அவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழில் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன். இதன் பிறகு வெப்பம், மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, மெர்சல், 24, சைக்கோ, இருமுகன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்தார். ஓ காதல் கண்மணி படம் நித்யா மேனனின் கேரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்தது.

Dear Exes First Look வெளியீடு :

இந்நிலையில், நித்யா மேனனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Dear Exes First Look) மற்றும் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் காமினி இயக்கத்தில் நித்யா மேனன் நடித்துள்ள படம் ‘டியர் எக்ஸஸ்’ ஆகும். பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா புரொடக்ஷன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. காதலில் தோல்வி அடைந்த ஆண்களை சூப் பாய்ஸ் என்று அழைக்கும் வழக்கம் உண்டு. அப்படி சூப் பாய்ஸ் பற்றி எத்தனையோ படங்கள் வெளிவந்துள்ளன. இம்முறை ஒரு சிறிய மாற்றத்திற்காக, காதலில் தோல்வியடையும் பெண்ணைப் பற்றிய படம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவலை படக்குழுவினர் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply