Dear Movie Trailer : டியர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவரும் டியர் திரைப்படத்தின் ட்ரெய்லர் (Dear Movie Trailer) வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்து இதே ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள மற்றோரு படம் டியர் ஆகும். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தை ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்க, வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிஷெட்டி மற்றும் ஜி.பிருத்விராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். காளி வெங்கட், இளவரசன், ரோகினி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம் மற்றும் நந்தினி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் (Dear Movie Trailer) வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

Dear Movie Trailer :

கணவன்-மனைவி இடையே குறட்டை பிரச்சனை எவ்வளவு தீவிரமான பிரச்சனையாக இருக்கிறது என்பதை குறட்டை பற்றி வெளியாகும் படங்களை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டு மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் படமும் ஒரே ஒரு குறட்டையால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை காட்டியது. அதுவும் ஒரு சமூகத்தில் ஆண் குறட்டை விடுவதும் அதே சமூகத்தில் பெண் குறட்டை விடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை விட பெண்கள் இந்த விஷயத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். அப்படியொரு பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் டியர். இன்ஜினியரிங் படித்துவிட்டு செய்தி வாசிப்பாளரான ஹீரோ ஜி.வி.பிரகாஷ் இவரது குடும்பம். இன்னொரு பக்கம் ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷ். லைட்டா சத்தம் கேட்டதும் தூக்கத்தில் இருந்து விழிக்கும் ஹீரோ, கர்ஜிக்கும் சிங்கம் போல குறட்டை விடுகிற நாயகி. இவர்கள் இருவருக்கும் திருமணமான முதல் இரவிலேயே குறட்டை பிரச்சனை தொடங்குகிறது. அத்தகைய சிக்கலைத் தீர்ப்பது மிகவும் சிக்கலானது. ஆனால் குட் நைட் படத்தில், ஒரு தீர்வை விட யதார்த்தமான முறையில் மிகவும் கவித்துவமான தீர்வு சொல்லப்பட்டது. இந்த முறை டியர் டீம் என்ன மாதிரியான தீர்வைக் கொண்டு வரும் என்பதைப் பார்க்க ஏப்ரல் 10 வரை காத்திருக்க வேண்டும்.

Latest Slideshows

Leave a Reply