Decision To Increase The Production Of Trains : சென்னை ICF-ல் 2023-24-ல் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன

Railway Management Decision To Increase The Production Of Trains :

உலகிலேயே மிகப்பெரிய ரயில் பெட்டி தொழிற்சாலை ICF - ஒரு குறிப்பு :

சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள  ரயில் பெட்டி தொழிற்சாலை ICF ஆனது முதலில் ICF ரயில் பெட்டிகளை மட்டுமே தயாரித்து வந்தது. தற்போது ICF ஆனது LHB (Linke Hofmann Busch), EMU (Electric Multiple Unit), வந்தே பாரத் ரயில் பெட்டிகள் உள்ளிட்டவற்றை தயாரித்து வருகிறது. EMU பெட்டிகள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர மெட்ரோ பெட்டிகள், DMU எனப்படும் டீசல் மல்டிபிள் யூனிட், மெமு ரயில் பெட்டிகள் உள்ளிட்டவற்றையும் தயாரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மின்சாரத்தை உந்து சக்தியாக கொண்டு இந்த ரயில் பெட்டிகள் தன்னைத் தானே முன்னால் நகர்த்தி செல்கின்றன. இந்த வந்தே பாரத் ரயிலை தயாரிக்க ஒரு ரயிலுக்கு ரூபாய் 100 கோடி வரை இந்திய ரயில்வே நிர்வாகம் (Decision To Increase The Production Of Trains) செலவு செய்கிறது.

பயணிகள் மத்தியில் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் அதிநவீன வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில்,  ரயில்வே நிர்வாகம் அதன் தயாரிப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, 2023-24ம் நிதியாண்டில் சென்னை ICF-ல் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. அவை 16 பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மற்றும் 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் ஆக இருக்கும். ரயில்வேதுறை ஆனது இதற்கான அறிவிப்பை  ICF-க்கு அனுப்பியுள்ளது. சென்னை ICF தவிர, உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி, மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர், அரியாணா மாநிலம் சோனிபட் ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளிலும் வந்தே பாரத் ரயில் தயாரிக்க (Decision To Increase The Production Of Trains) திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த 3 தொழிற்சாலைகளையும் சேர்த்து மொத்தம் 1,047 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் ஆனது  தயாரிக்கப்படவுள்ளன.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த வந்தே பாரத் ரயில்கள் குறித்த அறிவிப்புகள் :

  • நாடு முழுவதும் முக்கியமான வழித்தடங்களில் ரயில்வே துறை 400 வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிட்டு உள்ளது.
  • ரயில்வே துறை 4 புது வடிவமைப்புகளில் வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிட்டு உள்ளது.
  1. தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்
  2. பார்சல் ரயில்
  3. வந்தே மெட்ரோ
  4. புறநகர் மின்சார வந்தே பாரத் ரயில்
  • ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயிலை தயாரிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
  • மார்ச் 12, 2024 நிலவரப்படி வந்தே பாரத் ரயில்கள் ஆனது 51 பல்வேறு வழித்தடங்களில் பயன்பாட்டில் உள்ளன.
  • இந்தியா முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு 2047ஆம் ஆண்டிற்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் 2,829 பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. முந்தைய நிதியாண்டை காட்டிலும் இது  127 அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply