Deep Depression In Bay Of Bengal Today : வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்

கடந்த ஒரு வாரமாக வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று (Deep Depression In Bay Of Bengal Today) மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ள நிலையில், பலத்த காற்று வீசும் என்பதால் சென்னை உள்பட 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி (Deep Depression In Bay Of Bengal Today)

வடமேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வங்கம் – வங்கதேசத்திற்கு இடையே கரையை கடக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கேரளா, கர்நாடக, தமிழக மாவட்டங்களான நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தேனி போன்ற பகுதிகளில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் தரைக்காற்று 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரெட் அலர்ட்

கோவை மற்றும் நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Deep Depression Over Bay Of Bengal - Platform Tamil

புயல் எச்சரிக்கை கூண்டு

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு புயலின் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது. புயல் உருவானது முதல் புயல் உச்சக்கட்ட தீவிரம் வரை ஒவ்வொரு படிநிலைகளையும் வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வழங்கும் தகவலின் அடிப்படையில் ஒன்றாம் எண், இரண்டாம் எண், மூன்றாம் எண் என மொத்தம் 11-ம் எண் புயல் கூண்டு வரை ஏற்றப்படுகிறது. மேலும் இந்த புயல் எச்சரிக்கை கூண்டு பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகளால் ஏற்றப்படும். அதேசமயம் இரவு நேரம் என்றால், வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுகிறது.

இதில் 1-ம் எண் புயல் கூண்டு வங்கக் கடலில் லேசான புயல் உருவாகியிருக்கிறது என்பதை குறிக்க ஏற்றப்படுகிறது. அதாவது தற்போது புயல் உருவாகக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது, துறைமுகங்கள் பாதிக்காமல் பலத்த காற்று வீசும் என்று அர்த்தம். இதுவே 11-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் ‘உச்சபட்ச ஆபத்து’ என்றும், அதி தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது என்று அர்த்தம். இந்த நிலையில் தமிழகத்தின் 7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply