Deep Fake Videos : டீப்ஃபேக் வீடியோக்கள் குறித்து பிரதமர் மோடி கவலை

Deep Fake Videos :

டீப்ஃபேக் வீடியோக்களை (Deep Fake Videos) உருவாக்க செயற்கை நுண்ணறிவை தவறாக பயன்படுத்துவதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இது ஒரு பெரிய கவலை என்று கூறியுள்ளார்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற தீபாவளி மிலன் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, டீப்ஃபேக் வீடியோக்களைக் (Deep Fake Videos) கண்காணிக்கவும், இதுபோன்ற வீடியோக்கள் வைரலாகும்போது எச்சரிக்கையாகவும் இருக்குமாறு ChatGpt குழுவைக் கேட்டுக் கொண்டதாகக் கூறினார். டீப் பேக்கிங்கினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பேசிய பிரதமர், தான் கர்பா நடனம் ஆடும் வீடியோவை பார்த்ததாகவும், ஆனால் பள்ளியில் இருந்து கர்பா நடனமாடியதில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், இந்த விவகாரம் குறித்து ஊடகங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்தது. அதைத் தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு, டீப்ஃபேக் தொழில்நுட்பம் மற்றும் போலி வீடியோக்கள் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, போலி வீடியோ தயாரித்து வெளியிட்டால், மூன்றாண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்த மத்திய அரசு, ஏற்கனவே அமலில் உள்ள சட்டங்கள் குறித்தும் உத்தரவு பிறப்பித்தது. மேலும், போலியான வீடியோக்களை (Deep Fake Videos) பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் எச்சரித்துள்ளார். இணையத்தைப் பயன்படுத்தும் அனைத்து டிஜிட்டல் பயனர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் பிரதமர் நரேந்திர மோடி அரசு உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

“டீப்ஃபேக்குகள் மிகவும் தீங்கு விளைவிக்கும். குறிப்பாக இது பெண்களை பாதிக்கின்றனர். அனைத்து டிஜிட்டல் பயனர்களின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உறுதி செய்வதில் எங்கள் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இதன் மூலம், எங்கள் இலக்கு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. என்று ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். மத்திய அரசும், அமைச்சரும் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்த போதும், டீப்ஃபேக் தொழில்நுட்பத்தில் நடிகை கஜோல் உடை மாற்றும் போலி வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டீப்ஃபேக் (Deep Fake Videos) குறித்து கவலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply