Deepavali Train Ticket Booking: ரயில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பதிவு டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தீர்ந்து விட்டதாக ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக தென்மாவட்டங்களிலேயே இது நடந்ததாக கூறப்படுகிறது.

தீபாவளி பண்டிகை

இந்த வருடம் தீபாவளி பண்டிகையானது வருகின்ற நவம்பர் மாதம் 12ஆம் நாள் கொண்டாடப்பட உள்ளது. இது ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் கூட்டம் இன்னும் அலைமோதும். இதனால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் பல பேர் பேருந்து கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். இதை சரி செய்யும் விதமாக ரயிலில் இரு நாளுக்கு முன்னதாகவே ரயில் மூலம் செல்ல புக்கிங் தொடங்கியது. நேற்று காலை 8 மணி அளவில் தொடங்கிய முன்பதிவில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய ஏராளமான மக்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.

முன்பதிவானது ஆரம்பித்த முதல் 10 நிமிடங்களிலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் காலியானது. முக்கியமாக சென்னையில் இருந்து மதுரை செல்லும் ரயில்கள் மற்றும் திருநெல்வேலி செல்லும் ரயில்கள் டிக்கெட் காலி ஆகின. அதற்கு அடுத்து கன்னியாகுமரி செல்லும் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இதற்கு அடுத்து நவம்பர் 10ஆம் தேதி பயணம் செய்ய விரும்பும் நபர்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இன்று காலையும் முன்பதிவு தொடங்கிய சில நேரத்தில் டிக்கெட்டுகள் காலி ஆகிவிட்டன.

காத்திருக்கும் பயணிகள்

தென் மாவட்ட ரயில்கள் புக்கிங் மட்டும் சில நொடிகளிலேயே வெயிட்டிங் லிஸ்ட் வருகின்றதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக நெல்லை எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் போன்ற பெரும்பாலான ரயில்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. மீதமுள்ள ஒரு சில ரயில்களில் 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வெயிட்டிங் லிஸ்ட் வருவதாக பயணிகள் கூறுகின்றனர். அதிகாலை 3 மணி அளவில் இருந்து கவுண்டரில் டிக்கெட் வாங்க காத்திருக்கும் பயணிகள் டிக்கெட் கிடைக்காததால் பெருத்த ஏமாற்றத்திற்கு உட்பட்டனர். இதனால் ஏமாற்றம் அடைந்த பயணிகள் இந்த மாதிரி கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு அதிகாலை மற்றும் இரவில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply